அன்வாருக்கு எதிரான பேரணியை கைவிட இயலாது

பிரதமரர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு எதிராக வரும் சனிக்கிழமை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ள பேரணியை கைவிட இயலாது என்று அதன் ஏற்பாட்டாளர்கள் இன்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

நாடு மற்றும் மக்களின் நலனை கருத்தில் கொண்டு அந்த பேரணி ஏற்பாட்டை கைவிடுமாறு போலீசார் இன்று அறிவுறுத்தியுள்ளது தொடர்பில் ஏற்பாட்டாளர் குழுவினர் எதிர்வினையாற்றியுள்ளனர்..

புத்ராஜெயா, Kompleks Seri Perdana- முன்புறம் கார்கள் நிறுத்தும் இடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள Rakyat Lawan Anwar என்ற இந்தப் பேரணி திட்டமிட்டப்படி நடைபெறும். அதில் எந்தவொரு மாற்றமும் இருக்காது என்று அந்த பேரணி நடவடிக்கை குழுவிற்கு தலைமையேற்றுள்ள வழக்கறிஞர் Muhammad Rafique Rashid Ali தெரிவித்தார்.

மிக அமைதியாக நடைபெறக்கூடிய பேரணிக்கு எந்தவொரு தரப்பினரின் அனுமதியும் தங்களுக்கு தேவையில்லை என்று, இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்