அமைச்சர்கள் அந்தோணி லோக், ஸ்டீவன் சிம்மிற்கு தேவஸ்தானம் நன்றி

வரும் ஜனவரி 25 ஆம் தேதி கொண்டாடப்படவிருக்கும் பத்துமலை தைப்பூசவிழாவை முன்னிட்டு, பத்துமலை திருத்தலத்திற்கு வருகை புரியும் பக்தர்களுக்கு இரண்டு தினங்களுக்கு இலவச ரயில் போக்குவரத்து சேவைக்கு ஏற்பாடு செய்து இருக்கும் போக்குவரத்து அமைச்சர் Anthony Loke – க்கிற்கும், பக்தர்கள் தங்குவதற்கும், இளைப்பாறுவதற்கும் பெரிய கூடாரங்களை அமைத்து கொடுத்துள்ள மனித வள அமைச்சர் Steven Sim Chee Keong- கிற்கும் கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் தேவஸ்தானம் தனது நன்றியை தெரிவித்துக்கொண்டது.

கடந்த வாரம் சனிக்கிழமை அமைச்சர் அந்தோணி லோக்கும், நேற்று வெள்ளிக்கிழமை மனித வள அமைச்சர் Steven Sim Chee Keong- கும் பத்துமலைத் திருத்தலத்திற்கு நேரடியாக வருகை தந்து, பத்துமலை தைப்பூச விழா மேலும் சிறப்பதற்கு தத்தம் அமைச்சின் சார்பில் வழங்கக்கூடிய பங்களிப்பை அறிவித்து இருப்பதை நன்றிபெருக்குடன் தேவஸ்தானம் வரவேற்பதாக அதன் தலைவர் டான்ஸ்ரீ டத்தோ டாக்டர் ஆர். நடராஜா, செய்தியாளர்கள் கூட்டத்தில் தெரிவித்தார்

இரு அமைச்சுக்கள் வழங்கியுள்ள இந்த சலுகைகளையும், வசதிகளையும் தைப்பூச விழாவில் கலந்து கொள்ளவிருக்கும் பொது மக்கள் நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற டான்ஸ்ரீ நடராஜா கேட்டுக்கொண்டார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்