அம்னோ சொந்த சின்னத்தில் போட்டியிட வேண்டும்

பெட்டாலிங் ஜெயா, ஜுலை 01

வருகின்ற 16 ஆவது பொதுத் தேர்தலில் அம்னோ தனது சொந்த சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்று அரசியல் ஆய்வாளர் ஒருவர் பரிந்துரை செய்துள்ளார்.

மலாய்க்காரர்கள் மத்தியில் அம்னோ எத்தகைய செல்வாக்கைப் பெற்றுள்ளது என்பதை ஆராயும் சோதனைக் களமாக அம்னோ இந்த அளவுக்கோலை பயன்படுத்த வேண்டும் என்ற அகாடமி நுசந்தரா கழகத்தின் அரசியல் ஆய்வாளர் அஸ்மி ஹாசன் இந்த பரிந்துரையை முன்வைத்துள்ளார்.

கடந்த 50 ஆண்டு காலமாக பயன்படுத்தி வந்த பாரிசான் நேஷனல் தராசு சின்னத்தைவிட அம்னோவின் சின்னம் எந்த அளவிற்கு மலாய்க்காரர்கள் மத்தியில் ஆதரவையும், செல்வாக்கையும் பெற்றுள்ளது என்பதை ஆராய்வதற்கு இந்த பலப்பரீட்சை மிக முக்கியமாகும் என்று அந்த ஆய்வாளர் வலியுறுத்தியுள்ளார்.

மலாய்க்காரர்கள் மத்தியில் அம்னோவின் செல்வாக்கு அதிகரித்துள்ளது என்று கூறி, வெறும் முழங்கையில் புடம் போடுவதைக் காட்டிலும் அதனை சோதித்து பார்ப்பதே சாலச் சிறந்ததாகும் என்று அந்த ஆய்வாளர் அஸ்மி ஹாசன் பரிந்துரைத்துள்ளார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்