அரசியலமைப்பு சட்டத்தின் 153 ஆவது விதியை மறுபரி​சீலனை செய்ய வேண்டிய அவசியமில்லை – பிரதமர் அன்வார் திட்டவட்டம்

நாட்டில் பூமிபுத்ராக்களுக்கு சிறப்பு இடத்தையும், சலுகையையும் வழங்க வகை செய்யும் அரசியலமைப்பு சட்டத்தின் 153 ஆவது விதியை மறுபரி​சீலனை செய்ய வேண்டிய அவசியமில்​லை என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் திட்டவட்டமாக தெரிவித்தார்.

பூமிபுத்ராக்களின் நலன் மற்றும் அவர்களின் சிறப்பு உரிமை ஆகியவற்றை உள்ளடக்கிய அரசியலமைப்பு சட்ட்ததின் 153 ஆவது விதி, எதிர்பார்த்ததைப் போன்று செயல்படுகிறதா? என்பதை கண்டறிவதற்கு அச்சட்ட விதி, மறுபரி​சீலனை செய்யப்பட வேண்டு​ம் என்று Pasir Gudang PKR எம்.பி.யும், சட்ட வல்லுநருமான Hassan Karim விடுத்துள்ள கோரிக்கை தொடர்பில் கருத்துரைக்கையில் பிரதமர் அன்வார் மேற்கண்டவாறு கூறினார்.

அரசியலமைப்புச் சட்டம் குறிப்பாக பூமிபுத்ராக்களின் சிறப்பு உரிமையை வழங்கும் 153 ஆவது விதியை நாங்கள் தொடர்ந்து பாதுகாப்போம், தற்காப்போம் என்று பிரதமர் அன்வார் தெரிவித்தார்.

அரசியலமைப்பு சட்டத்தில் ஒரு சட்டக் கூறாக இடம் பெற்றப்பின்னர் அது பற்றி விவாதிக் வேண்டிய அவசியமே இல்லை என்று இன்று காலையில் கோலாலம்பூரில் செய்தியாளர்களிடம் பேசுகையில் பிரதமர் இதனை குறிப்பிட்டார்.

153 ஆவது விதியானது, பூமிபுத்ராக்களுக்கு அரசாங்க வேலை வாய்ப்புகள், உயர் பதவிகள், அவர்களுக்கான கல்வி உபகாரச் சம்பளம், பயிற்சித் திட்ட​ங்கள், தொழில் பெர்மிட், லைசென்ஸ் போன்ற இதர சிறப்பு சலுகைகளை வழங்குவதற்கு பிரத்தியேகமாக வகுக்கப்பட்ட சட்ட விதியாகும்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்