அல்லா காலணி விவகாரம் குறித்து ஜாகிம் விசாரணை

கோலாலம்பூர், ஏப்ரல் 7 –

அரபு மொழியில் ‘அல்லா’ சொல் கொண்டு அச்சிடப்பட்ட காலணியை விற்பனை செய்ததாக கூறப்படும் சம்பந்தப்பட்ட நிறுவனத்தை விசாரிக்குமாறு மத விவகார அமைச்சர் நாயிம் மொக்தார் இஸ்லாமிய மேம்பாட்டு துறையான ஜாகிம் யை கேட்டுக் கொண்டுள்ளார்.

குவாந்தான்னில் உள்ள சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் கடையிலிருந்து அந்த சர்சைக்குரிய காலணியை வாங்கியதாக ஒருவர் இன்று முகநூலில் காணொளி ஒன்று பதிவேற்றம் செய்திருந்ததுடன் இதுக்குறித்து போலீஸ் புகார் செய்ய போவதாக தெரிவித்திருந்தார்.

சம்பந்தப்பட்ட தரப்பினரை நாளை திங்கட்கிழமை ஜாகிம் அழைத்து விசாரணை மேற்கொள்ளவிருப்பதாக நாயிம் கூறினார்.

அதே வேளையில் இதில் சம்பந்தப்படாத மற்ற தரப்பினர்கள் பொறுமை காப்பதுடன் இந்த குற்றச்சாட்டை விசாரிக்க ஜாகிம் உட்பட மற்ற அதிகாரிகளுக்கு முதன்மை இடம் வழங்க வேண்டும் என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

இஸ்லாம் சமயத்திற்கு தீங்கு விளைவிக்கும் வகையில் வெளியிடப்படும் எந்தவொரு சர்சைக்கும் அமைதியாக இருக்க மாட்டோம் என்பதுடன் இதுக்கு‌றி‌த்து நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும் என்று நாயிம் மேலும் விவரித்தார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்