ஆக்சிஜன் வால்வில் கோளாறு, சுனிதா வில்லியம்ஸின் 3வது விண்வெளிப் பயணம் கடைசி நிமிடத்தில் ரத்து

நாசா, மே 08-

இந்திய வம்சாவளி அமெரிக்கரான சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி அறிவியல் துறையில் ஆர்வம் உள்ளவர்களுக்கு முன்னுதாரணமாக இருந்து வருகிறார். அவர் இன்று மீண்டும் மூன்றாவது முறையாக விண்வெளிப் பயணத்தைத் தொடங்கத் தயாராக இருந்தார்.

விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மேற்கொள்ள இருந்த மூன்றாவது விண்வெளிப் பயணம் திடீரென ரத்தாகி இருக்கிறது. அவரை விண்வெளிக்கு அழைத்துச் செல்ல இருந்த போயிங் ஸ்டார்லைனர் விண்கலத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் அவரது விண்வெளிப் பயணம் மறு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்திய வம்சாவளி அமெரிக்கரான சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி அறிவியல் துறையில் ஆர்வம் உள்ளவர்களுக்கு முன்னுதாரணமாக இருந்து வருகிறார். அவர் இன்று மீண்டும் மூன்றாவது முறையாக விண்வெளிப் பயணத்தைத் தொடங்கத் தயாராக இருந்தார்.

அவர் பயணிக்க இருந்த போயிங் ஸ்டார்லைனர் விண்கலம் புளோரிடாவின் கேப் கனாவரலில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து இந்திய நேரப்படி காலை 8.04 மணிக்குப் புறப்பட இருந்தது. இருப்பினும்,  விண்ணில் செலுத்தப்படுவதற்கு 90 நிமிடங்களுக்கு முன்பு, அட்லஸ் V ராக்கெட்டின் ஏவுதல் நிறுத்தப்பட்டது.

விண்கலத்தில் உள்ள ஆக்ஸிஜன் வால்வில் கோளாறு இருப்பது கண்டறியப்பட்டதால்,  இந்தப் பயணம் ஒத்திவைக்கப்படுவதாக அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா அறிவித்தது. ஸ்டார்லைனர் விண்கலத்தில் இருந்து சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அவருடன் செல்லவிருந்த பேரி வில்மோர் ஆகியோர் விண்கலத்தில் இருந்து பாதுகாப்பாக வெளியேறியுள்ளனர்.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விண்வெளி வீராங்கனை ஏற்கனவே 322 நாட்கள் விண்வெளியில் தங்கியவர். இந்தப் பயணம் அவரது மூன்றாவது விண்வெளிப் பயணமாக இருந்திருக்கும். விண்வெளியில் அதிக மணிநேரம் நடந்த பெண் என்ற சாதனையையும் படைத்தார். பிறகு, அவரது சாதனையை பெக்கி விட்சன் முந்தினார்.

வில்லியம்ஸ் டிசம்பர் 9, 2006 அன்று தனது முதல் விண்வெளிப் பயணத்தை மேற்கொண்டார். அது ஜூன் 22, 2007 வரை நீடித்தது. அபோபது விண்வெளியில் நான்கு முறை, மொத்தம் 29 மணிநேரம் 17 நிமிடங்கள் ஸ்பேஸ்வாக் செய்து உலக சாதனை படைத்தார். ஜூலை 14 முதல் நவம்பர் 18, 2012 வரை இரண்டாவது பயணம் மேற்கொண்டார்.

59 வயதான அவர் தனது மூன்றாவது பயணத்திற்காக ஸ்டார்லைனர் விண்கலத்தை வடிவமைக்கவும் உதவியுள்ளார். இதற்காக நாசா மற்றும் போயிங்கின் பொறியாளர்களுடன் பணிபுரிந்தார். “நான் சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்ததும், என் வீட்டிற்கு திரும்பிச் சென்றது போல் இருக்கும்” என்றும் அவர் கூறினார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்