இந்திய இளைஞருக்கு 17 ஆண்டு சிறை

புத்ராஜெயா, ஜூன் 28-

ஆறு ஆண்டுகளுக்கு முன்பு, தனது காரில் 25 கிலோ Cannabis உட்பட பல்வேறு வகையான போதைப்பொருட்களை வைத்திருந்த குற்றத்திற்காக ஓர் இந்திய இளைஞருக்கு விதிக்கப்பட்ட மரணத் தண்டனையை கூட்டரசு நீதிமன்றம் இன்று ரத்து செய்தது.

மரணத் தண்டனைக்கு பதிலாக அந்த இளைஞருக்கு 17 ஆண்டு சிறைத்தண்டனையை விதிப்பதாக கூட்டரசு நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

மூவர் அடங்கிய நீதிபதி குழுவிற்கு தலைமையேற்ற சபா, சரவா தலைமை நீதிபதி அப்துல் ரஹ்மான் செப்லி, அந்த இளைஞருக்கு எதிரான மூன்று குற்றச்சாட்டுகளில் ஒவ்வொரு குற்றத்திற்கும் 10 பிரம்படித் தண்டனை விதிப்பாக அறிவித்தார்.

மதுபான இன்னிசை மையத்தின் முன்னாள் பணியாளரான 27 வயது பி.பவித்திரன் என்ற அந்த இளைஞர், தனக்கு எதிரான மூன்று குற்றச்சாட்டுகளையும் ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து கூட்டரசு நீதிமன்றம் மேற்கண்ட தண்டனையை விதித்தது.

பவித்திரன், இந்த மூன்று குற்றங்களையும் புரியும் போது அவருக்கு வயது 20 என்பதால் குற்றவியல் சட்டம் 288 ஆவது பிரிவின் கீழ் கூடிய பட்சம் 24 பிரம்படித் தண்டனை மட்டுமே அனுமதிக்கப்படுகிறது.

அந்த இளைஞருக்கு கடந்த 2021 ஆம் ஆண்டு ஜோகூர் பாரு உயர் நீதிமன்றம் விதித்த மரணத் தண்டனையை, 2022 ஆம் ஆண்டு புத்ராஜெயா அப்பீல் நீதிமன்றம் நிலைநிறுத்தியது. எனினும் அந்த மரணத் தண்டனையை கூட்டரசு நீதிமன்றம் இன்று ரத்து செய்தது.

கடந்த 2018 ஆம் ஆண்டு 19 ஆம் தேதி மாலை 4.30 மணியளவில் ஜோகூர்பாரு, தமன் முத்தியர றினி என்ற இடத்தில் ஓர் உணவகத்தின் கார் நிறுத்தும் இடத்தில் பவித்திரன் இக்குற்றத்தை புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்