இந்திய பாதுகாவலரை விட்டு பிரிய மனமில்லாமல் வருந்தும் மாணவர்கள்

ஈப்போ, SK Bandar Baru Putera ஆரம்ப பள்ளியில் கடந்த ஆறு ஆண்டுகளாக பாதுகாவலராக பணிபுரியும் K.Kittu முதன்முதலில் வேலைக்குச் சேர்ந்த போது மாணவர்கள் அருகில் வருவதையும் பேசுவைதையும் தவிர்த்த வேளையில் தற்போது 900 மாணவர்களுக்கு பிடித்தமான ஒரு நபராக திகழ்ந்திருக்கின்றார்.

ஓர் இந்தியனாக இருப்பது மட்டுமல்லாமல் தோற்றத்தில் மாறுபட்டவையாக இருப்பதால் பலர் நெருங்கி வருவதற்கோ பேசுவதற்கோ தயங்கினர். இருந்தபோதிலும் மாணவர்களின் பாதுகாப்பிற்கு மிகுந்த அக்கறை செலுத்தியதாக FMT க்கு அளித்த பேட்டியில் அவர் தெரிவித்தார்.

தினமும் மாணவர்கள் பள்ளிக்கு வரும்போது காலை வணக்கம் சொல்லி வரவேற்குதல், சிற்றூண்டிச் சாலையில் அவர்கள் சாப்பிடும் பொழுது என்ன சாப்பிடுகிறார்கள் என்று அக்கறையாக கேற்பது, ஓடாமல் மெதுவாக நடக்க கூறி வலியுறுத்துதல் ஆகியவை பிடித்து தமக்கு செல்லமாக ‘uncle kittu’ என்று மாணவர்கள் அழைப்பது வழக்கமாகிவிட்டது என்றார் kittu.

மாணவர்கள் kittu -வை ஓடிச் சென்று கட்டி அணைக்கும் காணொளி ஒன்று தற்போது வைரலாக பரவி வருவதை காணமுடிகின்றது. அவரின் ஒப்பந்த காலம் முடிவடைந்து பள்ளியை விட்டு செல்லப்போகிறார் என்று அறிந்து பலர் வருத்தமும் நினைவு பரிசுகளும் கடிதங்களும் அளித்த மாணவர்களின் அன்பினை வெளிப்படுத்தினர்.

மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் வேண்டுக்கோளுக்கு இணங்க பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கம் அவர் வெளியேறிய ஒரு மாதத்திற்குள்ளேயே வேலை ஒப்பந்தத்தை நீடிக்க செய்ததுடன் மீண்டும் அப்பள்ளிக்கே பாதுகாவலராக வந்தது அனைத்து மாணவர்களுக்கும் சிறப்பான செய்தி என்று பெற்றோர்கள் தெரிவித்தனர்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்