இந்த நாடுகளில் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை ஒரு மரத்தை கூட பார்க்கவே முடியாது

ஒரு மரங்களின் சுவடு கூட இல்லாத சில நாடுகள் உலகில் உள்ளன. அவற்றை குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

இந்த பூமியில் நாம் வாழ்வதற்கு மரங்களும் செடிகளும் முக்கிய பங்கு வகிக்கின்றன. குறிப்பாக, மரங்கள் பூமிக்கு நுரையீரல் போன்றது. இவை 
மனிதர்கள் மற்றும் பிற விலங்குகள் வெளியிடும் கார்பனை உறிஞ்சி நமக்கு ஆக்ஸிஜனாகக் கொடுக்கின்றது. அதுமட்டுமின்றி, மரங்கள் பூமியில் மண் அடுக்கையும் பராமரிக்கின்றது.

அதிக மரங்கள் இருக்கும் இடங்களில் சுற்றுப்புறம் மிகவும் தூய்மையாகவும், அங்கிருக்கும் மக்களுக்கு சுவாச நோய்களின் அபாயமும் குறைவாக இருக்கும். ஆனால் உலகில் ஒரு மரம் கூட இல்லாத சில நாடுகள் உள்ளன என்பது உங்களுக்குத் தெரியுமா..? கண்ணுக்கு எட்டிய தூரம் வரை இந்த நாடுகளில் நீங்கள் ஒரு மரத்தை கூட பார்க்கவே முடியாது. இப்போது இந்த பதிவில் மரங்கள் இல்லாத அந்த நாடுகளைப் பற்றி பார்க்கலாம் வாங்க.

கிரீன்லாந்து: இதன் பெயரைக் கேட்டாலே இந்த இடம் பசுமை நிறைந்ததாக இருக்கும் என்று நீங்கள் நினைத்தால் அது தவறு. ஆம் அதுதான் உண்மை. இந்த நாட்டில்  ஆயிரக்கணக்கான மைல்களுக்கு  ஒரு மரத்தைக் கூட பார்க்கவே முடியாது. உலகின் மிகப்பெரிய தீவு என்றால் அது கிரீன்லாந்து தான். இந்த இடம் முழுவதும் பனிப்பாறைகள் சுற்றிலும் காணப்படும்.

கத்தார்: மிகப்பெரிய எரிவாயு இருப்புக்களுக்கு பெயர் பெற்ற இந்த நாடானது, சவுதி அரேபியா மற்றும் பாரசீக வளைகுடாவால் சூழப்பட்டுள்ளது. இந்த நாடு முழுவதும் பாலைவனமாக இருப்பதால், இங்கு எங்கும் ஒரு செடியைக் கூட உங்களால் காண முடியாது. எண்ணெய் இருப்பு மற்றும் முத்து உற்பத்தி காரணமாக, இந்த நாடு உலகில் பணக்கார நாடுகளில் ஒன்றாக கருதப்படுகிறது. இருப்பினும், இங்கு மரங்கள் இல்லாததால், பழங்கள் மற்றும் பூக்களுக்கு பிற நாடுகளை சார்ந்துள்ளது.

அண்டார்டிகா: இந்த பட்டியலில் அண்டார்டிகாவும் உண்டு. இந்த நாட்டில் 98% பனிக்கட்டியால் சூழப்பட்டுள்ளது. இது உலகிலேயே மிகவும் குளிரான இடமாகக் கருதப்படுகிறது. கோடை காலத்தில் கூட இங்கு சராசரியாக வெப்பநிலை 20 டிகிரியாக இருக்கும் என்பதால், எந்த தாவரமும் வளருவது சாத்தியமில்லை.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்