இம்பேக்ட் பிளேயர் ரூல் மாற்றம் இல்லை

இந்தியா, மே 10-

அடுத்த ஆண்டு முதல் இம்பேக்ட் பிளேயர் ரூல் தொடராது என்பதை நிராகரிக்க ஜெய் ஷா மறுத்த நிலையில் இந்திய அணிக்கு புதிய பயிற்சியாளரை தேடும் பணி விரைவில் தொடங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் ஜூன் 1 ஆம் தேதி 9ஆவது டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் தொடங்குகிறது. இந்த தொடரில் இந்தியா, இலங்கை, இங்கிலாந்து, அயர்லாந்து, நெதர்லாந்து, நேபாள் என்று மொத்தமாக 20 அணிகள் இடம் பெற்று விளையாடுகின்றன.

ஜூன் மாதத்துடன் ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் முடிவடையும் நிலையில், இந்த தொடர் முழுவதும் டிராவிட் பயிற்சியாளராக செயல்படுவதற்கு ஒப்புக் கொண்டுள்ளார். இந்த தொடருக்கு பிறகு இந்திய அணியின் பயிற்சியாளர் யார் என்பதை தேடும் பணி விரைவில் தொடங்கப்படும் என்று ஜெய் ஷா கூறியுள்ளார்.

கடந்த 2021 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பைக்கு பிறகு இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் பதவியேற்றார். இவரது தலைமையிலான இந்திய அணியானது, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை இழந்தது. ஆசிய கோப்பையை வென்றது. ஆனால், கடைசியாக ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்தது.

இதற்கு முன்னதாக இந்திய அணியில் அணில் கும்ப்ளே, ரவி சாஸ்திரி ஆகியோர் பயிற்சியாளராக இருந்துள்ளனர். இதே போன்று கேரி கிறிஸ்டன், டங்கன் பிளட்சர், கிரேக் சேப்பல் ஆகியோர் பயிற்சியாளராக இருந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்