இரண்டு லத்தின் அமெரிக்கப் பிரஜைகள் குற்றஞ்சாட்டப்பட்டனர்

கோலாலம்பூர், ஜூன் 28-

கடந்த மாதம் கோலாலம்பூர், புக்கிட் டமன்சாராவில் ஒரு வர்த்தகரின் வீட்டில் நுழைந்து 70 லட்சம் வெள்ளி பெறுமானமுள்ள விலை உயர்ந்தப் பொருட்கள் மற்றும் ரொக்கப்பணத்தை கொள்ளையிட்டதாக இரண்டு லத்தின் அமெரிக்கப் பிரஜைகள் கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டனர்.

நீதிபதி டாக்டர் அஸ்ரல் அப்துல்லா முன்னிலையில் நிறுத்தப்பட்ட 22 வயது யேய்சன் ஆண்ட்ரெஸ் ரோச்சா மற்றும் டேவிட் செர்னா பேனா என்ற அந்த இரண்டு லத்தின் அமெரிக்கப் பிரஜைகள் தங்களுக்கு எதிரான குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரியுள்ளனர்.

இவ்விருவரும் இன்னும் பிடிபடாமல் இருக்கும் 45 வயதுடைய மேலும் ஒரு நபருடன் கூட்டாக சேர்ந்து இக்கொள்ளையில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.

இந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பில் நேற்று செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசிய கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ ருஸ்டி முகமது இசா, ஆடம்பர வங்களா வீட்டில் நிகழ்ந்த இந்த கொள்ளை தொடர்பில் ஆறு ஆண்களும், இரண்டு பெண்களும் கைது செய்யப்பட்டதாக குறிப்பிட்டு இருந்தார்.

இந்த கொள்ளை கடந்த மே 31 ஆம் தேதி ஒரு வர்த்தகப் பெண்மணி வீட்டில் நிகழ்ந்துள்ளதாக அவர் தெரிவித்து இருந்தார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்