இரு ஹெலிகப்டர்களை உட்படுத்திய விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இறுதி மரியாதை

லுமுட், ஏப்ரல் 24-

பெராக், லுமுட், மலேசிய கடற்படை தளத்தில், நேற்று மேற்கொள்ளப்பட்ட ஒத்திகையின் போது, இரு ஹெலிகப்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதி கொண்ட கோர விபத்தில் உயிரிழந்த 10 பேரில் எண்மரது சடலங்கள், ஜாலான் தம்புனிலுள்ள அரச மலேசிய மலாய் இராணுவ படையின் BATOLION 23-க்கு இன்று பிரார்த்தனைக்காக கொண்டுவரப்படவுள்ளது.

தற்போது, ராஜா பெர்மைசூரி பைனுன் மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்டுவரும் உடற்கூறு ஆய்வு பணிகள், இன்று மாலை மணி 2 அளவில் நிறைவு பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சம்பந்தப்பட்ட எண்மரது சடலங்களுக்கு சலாஹுத்தீன் அல் அயூபி பள்ளிவாசலில் பிரார்த்தனையும் இறுதி மரியாதையும் செய்தப் பின்னர், அடக்கம் செய்வதற்காக, அவர்களது சொந்த ஊர்களுக்கு பாதிக்கப்பட்டவர்களின் உடல்கள் அனுப்பி வைக்கப்படவுள்ளன.

மேலும், விபத்தில் உயிரிழந்த Skuadron 502 ஹெலிகப்டர் விமானியான லெப்டனன் தி. சிவசுதனின் நல்லுடல் சித்தியவானிலுள்ள அவரது வீட்டிற்கு கொண்டு வரப்படவுள்ளது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்