இலகு ரக விமானம் அவசரத் தரையிறக்கம்

Subang Sultan Abdul Aziz Shah விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட இலகு ரக விமானம் ஒன்று, கோலக்கிள்ளான் அருகில் உள்ள திறந்த வெளிப்பகுதியில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

இருவர் பயணித்த அந்த இலகு ரக விமானம், எவ்வித பாதிப்பின்றி பாதுகாப்பாக அவரச தரையிறக்கத்தை மேற்கொண்டுள்ளது.

சுபாங் வான்போக்குவரத்து கிளப்பினால் வழிநடத்தப்படட் 9M – ANA என்ற பதிவு எண்ணைக்கொண்ட Piper PA-28-161 என்ற அந்த இலகு ரக விமானம், பிற்பகல் 2.50 மணியளவில் சுபாங்கிலிருந்து புறப்பட்டதாக மலேசிய வான் போக்குவரத்து துறையின் தலைமை நிர்வாக அதிகாரி Datuk Kapten Norazman Mahmud தெரிவித்தார்.

விமானம் புறப்பட்ட எட்டு நிமிடத்திலேயே பிற்பகல் 2.58 மணியளவில் சுபாங் விமான நிலைய கட்டுப்பாட்டுக்கோபுரம் அவசர அழைப்பை பெற்றதாக அவர் குறிப்பிட்டார்.

இதனைத் தொடர்ந்து கோலாலம்பூர் விமான கட்டுப்பாட்டு மையத்தில் உள்ளூர் விமான மீட்பு ஒருங்கிணைப்புப் பிரிவு, தேடல் மற்றும் மீட்புப் பணிகளை ஒருங்கிணைக்கும் நோக்கில் தேடல் நடவடிக்கையை பிற்பகல் 3.10 மணியளவில் முடுக்கி விட்டதாக Kapten Norazman தெரிவித்தார்.

விமான அவசரத் தரையிறக்கம் தொடர்பில் விசாரணை நடத்தப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்