இழிவுப் படுத்தப்படுவதிலிருந்து இந்து மதத்தை பாதுகாப்போம் – பினாங்கு இந்து அறப்பணி வாரியம் !

பினாங்கு, டிச. 20 – ஈ.வெ. இராமசாமி இயக்கம் உட்பட எந்தவொரு அமைப்பு மற்றும் தனிநபர்களிடமிருந்து இந்து மதத்தை அவமதிக்கும் மற்றும் இழிவுபடுத்துவதற்கு எதிராக பினாங்கு இந்து அறப்பணி வாரியம் பாதுகாக்கும் நடவடிக்கையில் ஈடுபடும் என்று அந்த அறப்பணி வாரியம் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மலேசிய இந்துக்களாகிய நாங்கள் கடவுளை, ஆதியும் அந்தமுமானவராக நம்புகிறோம், தேசிய கோட்பாடு கொள்கைகளின்படி வாழ்கிறோம்.

தேசிய கோட்பாடு முதல் கொள்கை இறைவன் மீது நம்பிக்கை வைத்தல் என்பது ஆகும்.

நாங்கள் பினாங்கில் உள்ள இந்துக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு சட்டப்பூர்வ மத அமைப்பாகும், மேலும் 1906 ஆம் ஆண்டு இந்து அறவாரியம் சட்டத்தின்படி எங்கள் கடமையை நாங்கள் உறுதியாக நிலைநிறுத்துகிறோம்.

இந்து மதத்திற்கு எதிரான எந்தவொரு பொது நடவடிக்கைகள், பொது கருத்தரங்குகள், பொது சொற்பொழிவுகள் மற்றும் பொது விவாதங்களில் இருந்து விலகி இருக்குமாறு மலேசிய இந்துக்கள் நாங்கள் அறிவுறுத்துகிறோம் என்று பினாங்கு இந்து அறப்பணி வாரியம் ஓர் அறிக்கையில் வெளியிட்டிருந்தது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்