உடலில் கடும் காயங்களால் விமானி, துணை விமானி மரணம்

காப்பார், 12 ஆவது மைல், Kampung Tok Muda- வில் உள்ள ஒரு செம்பனைத் தோட்டத்தில் நேற்று பிற்பகல் 1.30 மணியவில் விழுந்து நொறுங்கிய BK 160 Gabriel ரக இலகு ரக விமான விபத்தில் பலியான விமானியும், துணை விமானியும் உடலில் பல இடங்களில் ஏற்பட்ட கடும் காயங்களினால் உயிரிழந்துள்ளனர் என்று சவப்பரிசோதனை முடிவில் தெரியவந்துள்ளது.
இவ்விபத்தில் உயிரிழந்த 31 வயது விமானி Daniel Yee Hsisng Khoo, 43 வயது துணை விமானி Roshaan Singh Rania ஆகியோரின் உடல்கள் மீது கிள்ளான் Tengku Ampuan Rahimah மருத்துவமனையின் சவக்கிடங்கில் நடத்தப்பட்ட சவப்பிரிசோதனை, இன்று மதியம் 12.15 மணியளவில் முடிவுற்றதாக வட கிள்ளான் மாவட்ட போலீஸ் தலைவர் S. விஜய ராவ் தெரிவித்தார்.

தவிர விமானியையும், துணை விமானியையும் அடையாளம் காண்பதற்கு அவர்களின் கைவிரல்கள் ரேகைகளும் பயன்படுத்தப்பட்டதாக விஜய ராவ் குறிப்பிட்டார்.

அவ்விருவரின் உடல்களையும் ஒப்படைப்பதற்கு ஏதுவாக சம்பந்தப்பட்ட குடும்பத்தினர் தொடர்பு கொள்ளப்பட்டுள்ளனர் என்று இன்று கிள்ளான் Tengku Ampuan Rahimah மருத்துவமனையின் சவக்கிடங்கு பகுதியில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் விஜயராவ் தெரிவித்தார்.

இவ்விபத்து தொடர்பில் அந்த இலகு ரக விமானம் கீழே விழுவதை நேரில் பார்த்த சாட்சிகளில் இதுவரையில் ஐவரிடம் போலீசார் வாக்குமூலம் பதிவு செய்துள்ளதாக அவர் மேலுழம் கூறினார்.

Air Adventure Flying Club- பிற்கு சொந்தமான அந்த இலகு ரக விமானம், சுபாங், Sultan Abdul Aziz Shah விமான நிலையத்திலிருந்து சுற்றிப்பார்ப்பதற்காக பிற்பகல் 1.28 மணியளவில் புறப்பட்ட நிலையில் பிற்பகல் 1.45 மணியளவில் காப்பாரில் விழுந்து நொறுங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்