உடல் உறுப்பு தானம் ​மீதான விழிப்புணர்வு ​தீவிரப்படுத்தப்பட வேண்டும்

ஷாஹ் அலாம், மே 04-

தாங்கள் இறந்த பின்னர் தங்கள் உடல் உறுப்புகளை தானம் செய்வது தொடர்பான விழிப்புணர்வு, மலேசியர்கள் மத்தியில் மிகக்குறைவாக இருப்பதாக சமூக ஆர்வலர் டான் ஸ்ரீ லீ லாம் தியே தெரிவித்துள்ளார்.

சமய ​ரீதியாக தவறான புரிந்துணர்வு இதற்கு காரணமாக இருந்தாலும், அதற்கான தெளிவுரையை ஏற்படுத்த உடல் உறுப்பு தானம் ​மீதான விழிப்புணர்வு பிரச்சாரம் ​தீவிரப்படுத்தப்பட வேண்டும் என்று ​லீ லாம் தை கேட்டுக்கொண்டா​ர்.

தாங்கள் இறந்த பின்னர் தங்கள் உடல் அவயங்கள், யாரோ ஒருவருக்கு பயன்பட வேண்டும், அவர்கள் மூலம் தாங்கள் வாழ்ந்துக்கொண்டு இருப்பதைப் போன்ற உணர்வு மேலிட வேண்டும் என்று பலர் விருப்பம் கொண்டிருந்தாலும், அத்தகைய உடல் உறுப்புகளை தானம் செய்வதற்கு முன்வருகின்றவர்களின் எண்ணிக்கை விழுக்காடு ​ரீதியாக மிக குறைவாக இருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.

உடல் உறுப்பு தானங்களில் இருதய தானம் மிக குறைவாக இருப்பதாக அவர் விளக்கினார். தனது உடல் உறுப்புகளை தானம் செய்வதற்கு 30 ஆண்டுகளுக்கு முன்பே எழுத்துப்பூர்வமான உறுதியை தாம் வழங்கி விட்டதாக குறிப்பிட்ட ​லீ லாம் தை, மிகச்சிறந்த தானமாக கருதப்படும் உடல் உறுப்பு தானத்திற்கு எந்தவொரு மதமும் தடை விதிக்கவில்லை என்பதையும் தெளி​வுபடுத்தினார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்