உரிமையாளருக்கு தெரியாமல் வாகனத்தின் உரிமை மாற்றிய ஆடவர் கைது

கோத்தா பாரு, ஜுன் 28-

கெளந்தன், கோத்தா பாருவில் நிறுவனத்திற்கு தெரியாமல் வாகனத்தின் உரிமையை மாற்றிய 51 வயது ஆடவரை போலீஸ் கைது செய்தது.

நிறுவன இயக்குநரும் MPV வாகன உரிமையாளருமான 20 வயதுடைய நபர் ஒருவர் அளித்திருந்த புகாரின் அடிப்படையில், நேற்று முந்தினம் மாலை மணி 2.23 அளவில் அவ்வாடவர் கைது செய்யப்பட்டதாக, கெளந்தன் போலீஸ் தலைவர் டத்தோ முகமது ஜாக்கி ஹாருன் தெரிவித்தார்.

கடந்த 2022ஆம் ஆண்டு மார்ச் 6ஆம் தேதி, சம்பந்தப்பட்ட நிறுவனம் ஆடவர் ஒருவருக்கு,பாசிர் புதே படகு துறையில் வர்த்தக நடவடிக்கையை நிர்வகிக்கும் பொறுப்புடன் அந்த வாகனத்தையும் அளித்திருந்தது.

ஆனால், அவ்வாடவர் கடமையை சரிவர செய்யாததால், அவரது சேவை முடிவுக்கு கொண்டு வரப்பட்டதோடு, அவருக்கு வழங்கப்பட்ட வாகனத்தை திரும்ப ஒப்படைக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டது.

ஆயினும், அவர் அந்த உத்தரவுக்கு கட்டுப்படாதததை அடுத்து, அவ்விவகாரம் அம்பலமானதாக, முகமது ஜாக்கி கூறினார்.

கைது செய்யப்பட்ட ஆடவர், போலி ஆவணங்களை பயன்படுத்தியது தொடர்பில் ஏற்கனவே விசாரணையை எதிர்நோக்கி வருவது கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்