எச்சரிக்கையை மக்கள் பொருட்படுத்தவில்லை

ஜோகூர், கோத்தா திங்கியில் கடற்பகுதியில் கடல் சார் நடவடிக்கைகளில் மக்கள் ஈடுபட வேண்டாம் என்று எச்சரிக்கைக்கும் வகையில் கடற்கரையில் ஆங்காங்கு சிவப்புக் கொடி ஏற்றப்பட்ட போதிலும் அதனை மக்கள் பொருட்படுத்துவதாக இல்லை என்று ஆய்வுகளில் தெரியவந்துள்ளன.

தற்போது ஜோகூர் உட்பட பல மாநிலங்களில் பெய்து வரும் அடை மழையில் கடற்பகுதியில் நீர்பெருக்கு உயர்ந்துள்ளது. கடலில் குளிப்பது, படகுகளில் சவாரி செய்வது போன்ற நடவடிக்கைகளில் மக்கள் ஈடுபட வேண்டாம் என்று மக்களை போலீசார் எச்சரித்து வண்ணம் உள்ளனர்.

மோசமான வானிலை,/ விரும்பத்தகாத சம்பவங்களுக்கு வித்திடலாம் என்பதால் கடற்பகுதியில் ஆங்காங்கு சிவப்பு கொடி கட்டப்பட்டுள்ளதாக கோத்தா திங்கி மாவட்ட போலீஸ் தலைவர் Superintenden Hussin Zamra தெரிவித்துள்ளார்.

நடப்பு உத்தவுகளை பின்பற்றி, நடக்குமாறு பொது மக்களுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்