என் மீது நம்பிக்கை வைத்த மஹி பாய் உங்களுக்கு நன்றி

இந்தியா, மே 04-

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்று விளையாடிய முஷ்தாபிஜூர் ரஹ்மான், தோனியிடம் ஆட்டோகிராஃப் பெற்றுக் கொண்டு தொடரிலிருந்து வெளியேறியுள்ளார்.

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடருக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்று விளையாடி வந்த வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் முஷ்தாபிஜூர் ரஹ்மான் தற்போது நாட்டிற்கு புறப்பட்டுச் சென்றுள்ளார். கடந்த ஆண்டு நடந்த ஐபிஎல் ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரூ.2 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார்.

இந்த தொடரில் இதுவரையில் சிஎஸ்கே விளையாடிய 10 போட்டிகளில் 5ல் வெற்றியும், 5ல் தோல்வியும் அடைந்து புள்ளிப்பட்டியலில் புள்ளிப்பட்டியலில் 5ஆவது இடத்தில் உள்ளது. இதில், முஷ்தாபிஜூர் ரஹ்மான் 9 போட்டிகளில் விளையாடி 14 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார்.

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டிக்கு பிறகு தோனியை சந்தித்து அவரிடம் ஆட்டோகிராஃப் பெற்றுள்ளார். அதில், தோனி வித் லவ் ஃபிஷ் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த தொடரில் தோனியின் வழிகாட்டுதலில் விளையாடிய முஷ்தாபிஜூர் ரஹ்மான் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது.

எல்லாவற்றிற்கும் நன்றி மஹி பாய். உங்களைப் போன்ற ஜாம்பவான்களுடன் ஒரே டிரஸ்ஸிங் ரூமைப் பகிர்ந்து கொண்டது என்பது சிறப்பு உணர்வாக இருந்தது. ஒவ்வொரு முறையும் நீங்கள் என் மீது நம்பிக்கை வைத்ததற்கு நன்றி. உங்களது உதவிக் குறிப்புகளைப் பாராட்டுகிறேன். நான் அந்த விஷயங்களை நினைவில் கொள்கிறேன். விரைவில் உங்களை மீண்டும் சந்தித்து விளையாட ஆவலுடன் காத்திருக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்