எம்.ஐ.ஓய்.சி. இளைஞர் இயக்கத்தின் தீபாவளி பொது உபசரிப்பு

மலேசிய இந்திய இளைஞர் மன்றம் (MIYC) ஏற்பாட்டில் “ஒளியில் ஒரு தீபாவளி” எனும் திறந்த இல்ல தீபாவளி பொது உபசரிப்பை கடந்த டிசம்பர் 16 ஆம் தேதி சிறப்பாக நடைபெற்றது.

கூட்டரசு பிரதேச இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறையின் கோலாலம்பூர், ராக்கான் மூடா வளாகத்தில் இந்த பொது உபசரிப்பு நடந்தேறியது.

இளைஞர் அமைப்புகள், பொது பல்கலைக்கழகங்கள், ஊடகங்கள், வர்த்தக சபைகள் மற்றும் பங்குதாரர்களை பிரதிநிதித்து மொத்தம் 130 பேர் கலந்து கொண்டனர்.

செனட்டர் டத்தோ சிவராஜ் சந்திரன் MIYC-இன் இந்திய மாணவர் கழகம் அல்லது SCION என அறியப்படும் திட்டத்தை அதிகாரப்பூர்வமாக துவக்கி வைத்தார். இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சின் செயலாளரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இளைஞர் அமைப்புகளின் (ROY) பதிவாளர் திரு ஹஸ்னாதா பின் ஹசனும் இதில் கலந்துகொண்டார்.

 இந்த கழகம் 18 முதல் 22 வயது வரையிலான இளம் தலைவர்களை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டது. 1 ஜனவரி 2026 ஆம் ஆண்டு அன்று அமல் படுத்தவிருக்கும் Akta Pertubuhan Belia dan Pembangunan Belia (Pindaan) 2019 [Akta A1602] கருத்தில் கொண்டு இக்கழகம் உருவாக்கப்பட்டது.

இளம் தலைவர்களை உருவாக்குவதில் ஏற்படும் சிக்கலைத் தவிர்க்க MIYC இன் தலைவர் திரு. தனேஷ் பாசில் அவர்களும் மற்றும் இளைஞர் வயது வரம்பு மாற்றம் திட்டக்குழு உறுப்பினர்களில் ஒருவரும் துணை அமைச்சர்  ஆடம் அட்லி அப்த் ஹலீம் தலைமையில் மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் பொதுக் கல்வி நிறுவனங்களிலிருந்து இளைஞர்கள் மற்றும் விளையாட்டுகள் அதிக இளைஞர்களை அணுகவும், ஆட்சேர்ப்பு செய்யவும் மற்றும் பயிற்சியளிக்கவும் இக்கழகம் உதவும்.

2026 இல் இளைஞர் வயது வரம்பு மாற்றத்தின் போது சிறந்த சமூக வளத்தை உருவாக்க கல்வி அமைச்சகம் மற்றும் உயர்கல்வி அமைச்சகத்தின் உதவியோடு இந்த விவகாரத்தை விரைவுபடுத்த வேண்டும்.

கூடுதலாக, MIYC ஆண்டு விழாவைக் கொண்டாடும் அடையாளமாக “32வது ஆண்டுகளின் சிறப்பு” சின்னத்தையும் அறிமுகப்படுத்தியது. மேலும், MIYC இன் 32வது ஆண்டு மற்றும் 1991 முதல் ஒரு சாம்ராஜ்யத்தை உருவாக்கிய MIYC உறுப்பினர்களின் சேவைகளை நினைவு கூர்தலே மலேசியாவின் மிக முக்கியமான இளைஞர் அமைப்புகளில் ஒன்றாக MIYC உறுதியாக நிற்கிறது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்