ஏமாற்றத்தின் விளிம்பில் டாக்டர் இராமசாமி

பெட்டாலிங் ஜெயா, மே 02-

DAP-யில் பதவி கிடைக்காததால் ஏமாற்றத்தின் விளிம்பில் இருந்து வரும் பினாங்கு முன்னாள் துணை முதலமைச்சர் டாக்டர் P. இராமசாமி, இந்தியர்கள் மத்தியில் தமது தலைமையிலான ஒற்றுமை அரசாங்கத்திற்கு எதிராக வெறுப்புணர்வை தூண்டும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் சாடினார்.

டாக்டர் இராமசாமி தற்போது விரக்தியின் விளிம்பில் இருக்கிறார். DAP-யில் எந்தப் பதவியும் கிடைக்காததால் டாக்டர் இராமசாமி ஏமாற்றத்தில் உள்ளார். DAP-யில் அவருக்கு எந்தப் பதவியும் கிடைக்கவில்லை என்றால் அது அவருடைய பிரச்னையே தவிர தம்முடையப் பிரச்னை அல்ல என்று அன்வார் தெளிவுபடுத்தினார்.

அன்வார் தலைமையிலான அரசாங்கம் இந்திய சமுதாயத்திற்கு ஒன்றமே செய்யவில்லை, ஓரங்கட்டி வருகிறது என்று டாக்டர் இராமாசாமி கூறி வருவது தொடர்பில் பிரதமருடனான கேள்வி, பதில் அங்கத்தில் பதில் அளிக்கையில் அன்வார் மேற்கண்டவாறு தெரிரிவித்தார்.

தமது தலைமையிலான அரசாங்கம் பூமிபுத்ராக்களின் நலனை பாதிக்காத அளவிற்கு இந்திய சமுதாயத்திற்கு தொடர்ந்து உதவி வருவதாக டத்தோஸ்ரீ அன்வார் விளக்கம் அளித்தார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்