ஒரே வாரத்தில் 6 பெருநாட்கள், மலேசியாவின் பன்முகத்தன்மையை காட்டுகின்றது

கோலாலம்பூர், ஏப்ரல் 15-

நாட்டில் இவ்வாரம் மட்டுமே 6 பெருநாட்கள் மிக விமரிசையாக கொண்டாடப்பட்டுள்ளன. நாட்டின் மிகப் பெரிய சொத்தாக பார்க்கப்படும் பன்முகத்தன்மையை அது காண்பிப்பதாக, ஒற்றுமைத்துறை அமைச்சர் டத்தோ ஆரோன் அகோ டகாங் பெருமிதத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

பல்லின மக்களிடையிலான ஒற்றுமை, கலை, கலாச்சாரம், சமய நம்பிக்கை முதலானவற்றை மக்கள் தற்காப்பது அவசியமானதாகவும் என்று அவர் வலியுறுத்தினார்.

நம் நாட்டில் மட்டும்தான் அதிக பெருநாட்கள் கொண்டாடப்படுகின்றன. இவ்வாரத்தில் மட்டுமே, மலேசியர்கள் நோன்பு பெருநாள், உகாதி, தமிழ்ப்புத்தாண்டு, வைசாக்கி, விஷூ, சொங்க்ரன் உள்ளிட்ட பெருநாட்களை கொண்டாடியுள்ளதாக கூறிய ஆரோன் அகோ டகாங் சம்பந்தப்பட்ட பெருநாட்கள் தொடர்பான புகைப்படங்களை , தனது X தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்