கணவர் அழைத்து சென்ற கே கிரிஷா எங்கே இருக்கின்றார் என தெரியவில்லை; அவர் இருக்கின்ற இடத்தைக் கண்டறிய பொதுமக்களின் உதவியை நாடுகின்றார் வி தேவித்ரா

ஜார்ஜ் டவுன்வ், ஜுன் 28-

பிரிந்து சென்ற கணவர் அழைத்துச் சென்ற தமது 3 வயது மகள் கே கிரிஷா தற்போது எங்கே இருக்கின்றார் என தெரியவில்லை. அவர் இருக்கும் இடத்தை அடையாளம் காண, தமக்கு உதவும்படி பொதுமக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார், 30 வயது தாயார் வி தேவித்ரா.

கடந்த மே 17ஆம் தேதி, கிரிஷாவை பராமரிப்பதற்கான உரிமையை, பொருளக அதிகாரியான தேவித்ராவுக்கு வழங்கிய ஷா ஆலம் உயர்நீதிமன்றம், அவரது கணவர் முன்வைத்திருந்த கோரிக்கைகள் அனைத்தையும் நிராகரித்து தீர்ப்பளித்தது.

அத்தீர்ப்பு தமக்கு மகிழ்ச்சியளித்தாலும், தமது மகள் இருக்கின்ற இடம் தெரியாதது அதிருப்தியை அளிக்கின்றது. தனது மகள் கிரிஷா மீண்டும் தம்மிடமே வர வேண்டும். இவ்வேளையில், தனது கணவரை தம்மால் தொடர்புக்கொள்ள முடியவில்லை என தேவித்ரா கூறியுள்ளார்.

முன்னதாக, கணவரை விவாகரத்து செய்வதற்கான வழக்கு நீதிமன்றத்தில் நடைப்பெற்றுவரும் நிலையில்,கிரிஷாவை பராமரிப்பதற்கான உரிமை தற்காலிகமாக தேவித்ராவுக்கு வழங்கப்பட்டது.

மாதத்திற்கு இருமுறை பொது இடங்களில்,கிரிஷாவை சந்திக்க, தேவித்ராவின் கணவருக்கு உயர்நீதிமன்றம் அனுமதியையும் வழங்கியிருந்தது.

கடந்தாண்டு செப்டம்பரில் கிரிஷாவை கோலாலம்பூருக்கு அழைத்துச் செல்வதாக, தமது கணவர் குறுந்தகவல் வழி தெரிவித்ததை அடுத்து, தேவித்ரா போலீசில் புகாரளித்திருந்தார்.

ஆனால், கிரிஷா அவரது தந்தையுடன் இருப்பதால், அவரை அவர் கடத்தியதாக அர்த்தம் கொள்ள முடியாது என விசாரணை அதிகாரி தம்மிடம் கூறியதாக, தேவித்ரா கூறியிருந்தார்.

இதனிடையே, சம்பந்தப்பட்ட தீர்ப்புக்கு எதிராக,தேவித்ராவின் கணவர் செய்துள்ள மேல்முறையீடு குறித்த நோட்டிசை அவர் தரப்பு வழக்கறிஞரிடமிருந்து நேற்று காலையில் தாம் பெற்றதாக தேவித்ராவின் வழக்கறிஞர் ரேனுகா கூறினார்.

கடந்தாண்டு நவம்பர் 7ஆம் தேதி, கிரிஷாவை தேவித்தராவின் கணவர், சிங்கப்பூரிலிருந்து இந்தியா, பெங்களூருக்கு விமான பயணத்தின் வழி அழைத்து சென்றுள்ளார்.

INTERPOL வழங்கிய தகவலில் அது தெரிய வந்திருப்பதாக, சிலாங்கூர் போலீஸ் எழுத்துப்பூர்வ பதிலில் கூறியுள்ளதாக,ரேனுகா குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்