கல்லூரி மாணவன் உயிரிழந்தான்

19 வயது கல்லூரி மாணவன் செலுத்திய மோட்டார் சைக்கிள், Four Wheel Drive வாகனத்துடன் மோதி, விபத்துக்குள்ளானதில் அம்மாணவன் சம்பவ இடத்திலேயே மாண்டார்.

இத்துயரச் சம்பவம் நேற்று இரவு 11.10 மணியளவில்
நெகிரி செம்பிலான், Kuala Pilah- Batu Kikir சாலையின் 2 ஆவது கிலோ மீட்டரில் நிகழ்ந்தது என்று Kuala Pilah மாவட்ட போலீஸ் தலைவர் Amran Mohd Gani தெரிவித்தார்.

Batu Kikir- ரிலிருந்து Kuala Pilah- வை நோக்கி அந்த Four Wheel Drive வாகனம் சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து நிகழ்ந்ததாக பூர்வாங்க விசாரணையில் தெரியவந்துளள்து என்று அவர் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்