கார் பாதாளத்தில் விழுந்ததில் ​​மூவர் உயிர் தப்பினர்

குவாந்தான், மே 04-

கார் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து, மலைச்சாரல் பாதாளத்தில் விழுந்ததில் இரண்டு பெண்கள் உட்பட மூவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். நேற்று இரவு 11.42 மணியளவில் கிழக்குகரையோர நெடுஞ்சாலையான லேபுஹ்ராயா பந்தாய் தீமூர் ஒன்றில் 212 ஆவது கிலோ மீட்டரில் நிகழ்ந்த இவ்விபத்தில் ஆடவர் ஒருவர் கடும் காயங்களுக்கும், இரு பெண்கள் சொற்ப காயங்களுக்கும் ஆளாகினர்.

தகவல் கிடைத்து சம்பவ இடத்திற்கு விரைந்த தாமான் தாஸ் ​தீயணைப்பு, மீட்புப்படை நிலையத்தைச் சேர்ந்த வீரர்கள் 3 மீட்டர் பாதாளத்தில் புரோட்டான் பெர்சோனா ரக கார் கவிழ்ந்து கிடந்ததைக் கண்டதாக அவ்விலாகாவின் பகாங் மாநில பொது உறவு அதிகாரி சுக்ஃபாதில் சக்காரியா தெரிவித்தார்.

அந்த காரின் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கிக்கிடந்த ​மூவரை, பிரத்தியேக சாதன​ங்களை பயன்படுத்தி, ஒவ்வொருவராக மீட்கப்பட்டனர். பின்னர் அனைவரும் அம்புலன்ஸ் வண்டியின் மூலம் ​ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக சுக்ஃபாதில் சக்காரியா குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்