காலனித்துவ சட்டங்களே இன்னும் கட்டுப்படுத்துகின்றன

இஸ்லாமிய நாடுகள், சுதந்திரம் பெற்ற போதிலும் அவற்றை காலனித்துவ சட்டங்களே இன்னமும் கட்டுப்படுத்துகின்றன என்று பாஸ் கட்சித் தலைவர் அப்துல் ஹாடி அவாங் குற்றஞ்சாட்டியுள்ளார்.

முன்பு நாட்டின் சுதந்திரத்திற்காக போராடிய தியாகிகள், கூட்டரசு அரசியலமைப்புச் சட்டத்தை ஓர் அடிப்படை அஸ்திவார கல்லாக நிலைநிறுத்தினர். அதாவது கூட்டரசின் மதமாக இஸ்லாத்தை நிலைநிறுத்தினர்.

காலஞ்சென்ற Tun Salleh Abas, Tan Sri Harun Hashim போன்ற நீதிபதிகள் திறம்பட பங்களிப்பை வழங்கினர். குறிப்பாக ஷரியா சட்டங்களை பாதுகாப்பதிலும், அவற்றில் திருத்தங்கள் செய்வதிலும் நிறைவான பங்களிப்பை வழங்கினர்.
ஆனால், தற்போது காலனித்துவ சட்டங்களே சுதந்திரம் பெற்ற நாடுகளை கட்டுப்படுத்துகின்றன என்று ஹாடி அவாங் குற்றஞ்சாட்டினார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்