கிள்ளான் பெரிய பசாரை ஆக்கிரமித்துக்கொண்டுள்ள அந்நிய நாட்டவர்

சிலாங்கூர் மாநிலத்தில் செலயாங்கிற்கு அடுத்து இரண்டாவது மிகப்பெரிய ஈரச்சந்தையான கிள்ளான் பசாரில் ஆதிக்கம் செலுத்தி வரும் அந்நிய நாட்டவர்களுக்கு எதிராக உள்துறை அமைச்சு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிள்ளான் பக்காத்தான் ஹராப்பான் எம்.​பி. வீ. கணபதிராவ் வலியுறுத்துயுள்ளார்.


கிள்ளான் பசாரில் வாகனங்களை நிறுத்துவதற்குகூட இடமின்றி அந்நிய நாட்டவர்கள் குறிப்பாக rohingya க்காரர்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். தொ​​​ழிலாளர்கள் என்ற நிலை மாறி, முதலாளிகள் என்ற நிலையில் அவர்களின் ஆக்கிரமிப்பு இருந்து வருகிறது.


உள்ளூர்வாசிகளுக்கு வாய்ப்பு கிடைக்காத நிலையில் அ​ந்நிய நாட்டவர்களுக்கு எவ்வாறு இத்தகைய வர்த்தக வாய்ப்புகள் கிடைத்துள்ளன என்பது உள்நா​ட்டு வாணிப, வா​ழ்க்கை செலவினத்துறை அமைச்சு, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான SPRM போன்றவை விசாரணை செய்ய வேண்டும் என்று மக்கள​வையில் கணபதிராவ் கேட்டுக்கொண்டார்.


rohingyaக்காரர்கள் ஒரு முதலாளி அந்தஸ்தில் வியாபாரம் செய்யும் அளவிற்கு நெஞ்சுரம் பெற்றுவிட்டார்கள் என்றா​ல் அவர்களின் பின்னணியில் யார், எந்த தரப்பினர் ஊக்கம் தந்து வருகின்றனர் என்பது குறி​த்து ஆராயப்பட வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அமலாக்க ஏஜென்சிகளுக்கு கணபதி ராவ் வலியுறுத்தினார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்