கிள்ளான் வட்டாரத்தில் திடீர் சோதனை

கிள்ளான், ஜூன் 24-

கிள்ளான் வட்டாரத்தில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் அந்நிய நாட்டவர்களுக்கு எதிராக மலேசிய குடிநுழைவுத்துறை நேற்று ஞாயிற்றுக்கிழமை திடீர் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

கிள்ளான், பண்டார் சுல்தான் சுலைமான் மற்றும் ஜாலான் சுல்தான் அப்துல் சமத் ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட இந்த சோதனை நடவடிக்கையில் கிட்டத்தட்ட 1,700 அந்நிய நாட்டவர்களிடம் சோதனை நடத்தப்பட்டது.

கடந்த மூன்று மாத காலமாக மேற்கொள்ளப்பட்ட உளவு நடவடிக்கையின் காரணமாக வங்காளதேசம், பாகிஸ்தான், மியன்மார் மற்றும் இந்தோனேசிய ஆகிய நாடுகளில் பிரஜைகளை இலக்காக கொண்டு இந்த சோதனை நடத்தப்பட்டதாக சிலாங்கூர் மாநில குடிநுழைவுத்துறை இயக்குநர் கைருல் அமினஸ் கமாருதீன் தெரிவித்தார்.

சமூக வலைத்தளங்களில் வாயிலாக ஓரிட மக்கள் அளித்த புகார்களின் அடிப்படையில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்