குப்பாங் சிப்பிகளை உட்கொள்ள விதிக்கப்பட்டுள்ள தடை தொடர்கிறது

போர்ட் டிக்சன், ஏப்ரல் 23-

நெகிரி செம்பிலான், போர்ட் டிக்சன் நீர்பகுதியிலிருந்து குப்பாங் எனப்படும் சிப்பிகளை எடுப்பதற்கு விதிக்கப்பட்டுள்ள தடை இன்னமும் தொடர்வதாக, அம்மாநில மீன்வளத்துறை இயக்குநர் காசிம் தாவே தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட நீர் பகுதியிலிருந்து மூன்றாவது முறையாக எடுக்கப்பட்ட சிப்பிகள் மற்றும் நீர் மாதிரிகளை, கோலாலம்பூர்-ரிலுள்ள மீன்வள உயிரியல் பாதுகாப்பு மையத்தில் சோதனைக்கு உட்படுத்தியதில், அவற்றில் அளவுக்கு அதிகமான உயிர் நச்சுகள் உள்ளது கண்டறியப்பட்டதால் அது உண்பதற்கு பாதுகாப்பானது அல்ல என்றாரவர்.

தற்போது, நான்காவது முறையாக அப்பகுதியிலிருந்து பெறப்பட்டுள்ள மாதிரிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. அதன் முடிவு ஏப்ரல் 26ஆம் தேதி தெரியவரும் என காசிம் தாவே கூறினார்.

ஏப்ரல் 2ஆம் தேதி, போர்ட் டிக்சன் நீர்பகுதியிலிருந்து எடுக்கப்பட்டிருந்த குப்பாங் வகை சிப்பிகளை உண்டிருந்த எண்மர், நச்சுணவு பாதிப்புக்கு இலக்காகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்