குருணை அரிசி கடத்தல் முறியடிப்பு

அண்டை நாட்டிலிருந்து பெரியளவில் குருணை அரிசி கட்டத்தலை மலேசிய சுங்கத்துறை வெற்றிகரமாக முறியடித்துள்ளது.

கடந்த பிப்ரவரி 6 ஆம் தேதி அண்டை நாட்டிலிருந்து 42 ஆயிரம் கிலோ அரிசி, கெடா, Pokok Sena- விற்கு கடத்தி வருவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சியில் ஒரு டிரெய்லர் லோரி தடுத்து நிறுத்தப்பட்டது மூலம் 840 மூட்டைகளை கொண்ட குருணை அரிசி பறிமுதல் செய்யப்பட்டதாக கெடா மாநில சுங்கத்துறை இயக்குநர் Nor Izah Latif தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு அரிசியுடன் கலப்படம் செய்வதற்காக இந்த குருணை அரிசி கடத்தி வரப்பட்டுள்ளதாக பூர்வாங்க விசாரணையில் தெரியவந்துள்ளது என்று அவர் மேலும் கூறினார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்