கூற்றை மறுத்தது நிதி அமைச்சு

பிரதமர் டத்தோஸ்ரீ அன்பார் இப்ராஹிமின் மூத்த புதல்வியும், முன்னாள் Permatang Pauh எம்.பி.யுமான Nurul Izzah, அரசாங்க ஏஜென்சிகளுக்கு இடையே பொருளாதார ஊக்குவிப்பு அமலாக்க, ஒருங்கிணைப்பு பிரிவான LAKSANA- வில் சம்பளம் பெறும் ஓர் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுவதை நிதி அமைச்சு மறுத்துள்ளது.

ஊடகங்கள் கூறியுள்ள அந்த குற்றச்சாட்டில் உண்மையில்லை என்று இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் நிதி அமைச்சு தெளிவுப்படுத்தியுள்ளது. .

அரசாங்க ஏஜென்சிகளின் பொருளாதார நடவடிக்கைகளை கண்காணிப்பதற்கு கடந்த 2020 ஆம் ஆண்டு நிதி அமைச்சின் கீழ் தோற்றுவிக்கப்பட்ட ஓர் அமைப்புதான் LAKSANA- வாகும்.

அதில் சம்பளம் பெறாத ஓர் ஆலோசகராகவே Nurul Izzah இருப்பதாக நிதி அமைச்சு விளக்கம் அளித்துள்ளது. இதனிடையே தமக்கு எதிராக ஏற்படுத்தப்பட்டுள்ள அவதூறு தன்மையிலான இந்த குற்றச்சாட்டு தொடர்பில் போலீஸ் புகார் செய்யப் போவதாக Nurul Izzah தெரிவித்துள்ளார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்