கெடா மந்திரி பெசார் சனூசிக்கு எதிராக போலீஸ் புகார்கள் அதிகரிக்கின்றன

ஒற்றுமை அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கு பெரிக்காத்தான் நேஷனல் தரப்பிடம் போதிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதாக கூறி வரும் கெடா மந்திரி பெசார் முகமட் சனூசி முகமட் நூர் மற்றும் பிரபல இணைய எழுத்தாளர் ராஜா பெட்ரா கமாருதீன்- க்கு எதிராக அதிகமான போலீஸ் புகார்கள் செய்யப்பட்டு வருகின்றன.

பிகேஆர் கட்சியின் இளைஞர் பிரிவு மற்றும் அதன் உயர்மட்டத் தலைவர்கள், மாநிலத் தலைவர்கள் இந்த புகார்களை செய்து வருகின்றனர்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை பெறும் முயற்சிகள் தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருவதாக இணைய எழுத்தாளர் ராஜா பெட்ரா அண்மையில் பகிரங்கமாக அறிவித்து உள்ளார்.

அரசாங்கத்தை கவிழ்க்கும் அப்படியொரு திட்டத்தை தாங்கள் கொண்டு இருப்பதாக கெடா மந்திரி பெசார் சனூசி ஒப்புக்கொண்டது தொடர்பில் போலீசார் விசாரணை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தும் வகையில் இப்போலீஸ் புகார்கள் செய்யப்பட்டு வருவதாக பிகேஆர் கட்சியின் இளைஞர் பொறுப்பாளர்கள் தெரிவித்தனர்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள், தமக்கு தெரிவித்துள்ள ஆதரவை நிரூபிப்பதற்கு நாடாளுமன்றத்தில் எந்த நேரத்திலும் பலப்பரீட்சையில் ஈடுபட தாம் தயாராக இருப்பதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் அறிவித்து விட்டார்.

பிரதமரின் அறிவிப்புக்கு பின்னரும் நாட்டில் அரசியல் குழப்பத்தை விளைவிக்க முற்படும் தரப்பினருக்கு எதிராக போலீசார் உடனடியாக விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று 13 போலீஸ் புகார்களில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்