கெமஞ்சேவை கலக்கும் மாப்பிளை கடை…

கெமஞ்சே. நெகிரி செம்பிலானில் தம்பின் அருகில் உள்ள ஒரு சிறு பட்டணமாகும். 1994 ஆம் ஆண்டு வடக்கு – தெற்கு நெடுஞ்சாலை திறக்கப்படுவதற்கு முன்னதாக வாகனமோட்டிகள் நின்று ஓய்வெடுத்து செல்லும் ஊராக இருந்து வந்துள்ளது.
வடக்கே காயூ ஹீதாம்மையும் தெற்கே ஜோகூர் பாருவையும் ஒரு நேர் கோட்டில் இணைக்கும் பிலஸ் நெடுஞ்சாலை இணைக்கப்படுவதற்கு முன்னதாக ஒரு பரபரப்பான சிற்றூராக கெமஞ்சே விளங்கியது.

ரப்பர், செம்பனைத் தோட்டங்கள் மிகுதியாக உள்ள கெமஞ்சேவை பிரபலமாக்கியது டத்தோ தஹா தலிப் கொலை வழக்காகும். கெமஞ்சே சட்டமன்ற உறுப்பினராகவும், நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்த டத்தோ தஹாவை கொலை செய்ததாக அன்றைய இளைஞர், விளையாட்டு, கலை, பண்பாட்டுத் துறை அமைச்சர் டத்தோ மொக்தார் ஹாஷிம் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு அவ்விசாரணை சுமார் 3 ஆண்டுகள் நடைபெற்ற காலக்கட்டத்தில் கெமஞ்சே என்ற பெயரை உச்சரிக்காமல் யாரும் இருந்திருக்க முடியாது.

தம்பினுக்கும் கிம்மாஸ்ஸிக்கும் இடையில் அமைந்துள்ள கெமஞ்சே கிட்டத்தட்ட 30 ஆயிரம் பேரை மக்கள் தொகையாக கொண்டுள்ளது. மூவின மக்களை கொண்ட கெமஞ்சே ஆரவாரமின்றி ஓர் அமைதியான சிற்றூராகும்.

நெகிரி செம்பிலான் மாநிலத்தில் கடைபிடிக்கப்பட்டு வரும் மினாங்கபாவ் மலாய் பாரம்பரிய நடைமுறை இன்னமும் மறையாமல் இருந்து வருகின்ற சிற்றூர்களில் ஒன்றாக கெமஞ்சே விளங்குகிறது. பெண்களுக்கு அதீத முன்னுரிமையும் முக்கியத்துவமும் வழங்கப்படும் நடைமுறை இன்னமும் பல குடும்பங்களில் காணமுடியும். பெண்களின் சொல்லுக்கும் செயலுக்கும் அதீத மதிப்பளிக்கும் ஊராக வகைப்படுத்தப்பட்டுள்ள கெமஞ்சே, பாரம்பரிய உணவு வகைகளுக்கு பிரச்சித்து பெற்றதாகும்.

கெமஞ்சேவை சொந்த ஊராக கொண்டிருந்தவர்கள் நாட்டில் பல்வேறு பகுதிகளுக்குக் குடிப்பெயர்ந்து சென்றிருந்தாலும் ஹரி ராயா, ஹஜ்ஜுப் பெருநாள் போன்ற விழாக்காலங்களில் தங்கள் சொந்த ஊருக்கு திரும்புவதை தவிர்பதில்லை. அந்த அளவிற்கு அவர்களின் நாவில் சுவை நிறைந்திருக்கும். தங்களின் சொந்த ஊரின் உணவு வகைகளை ஒரு கைப்பார்காமல் விடுவதில்லை.
அதிலும் இன்றுவரை கெமஞ்சே மக்களை வசியம் செய்து தம் கைப்பிடிக்குள் வைத்திருக்கும் மாப்பிளை கடை நாசி லெமாவைப் பற்றி சொல்லவா வேண்டும். சொல்லும் போதே நாக்கு சுவைக்க ஏங்குகிறது. அந்த சிறு தோட்டத்திற்குள் ஒரு சிறு கடையைப் போட்டு பல வருடங்களாக வெற்றிநடைப்பாதை போட்டு வருவதுதான் மாப்பிளை கடை நாசி லெமாக்.


உரைப்பு, புளிப்பு, இனிப்பு கலந்து நாவை ருசித்திட வைத்திடும். அந்த நாசி லெமாக் சிறிய பொட்டலமாக இருந்தாலும் முட்டை, கச்சாங், சம்பால், தீமூன், நாகட், அப்பளம் வைக்கப்பட்டிருக்கும். மிக மலிவான விலையில் பணிவான முறையில் மக்களிடம் வியாபாரம் செய்து வருபவர்தான் அந்த மாப்பிளை. பெரும்பாலான கெமஞ்சே மக்கள் அவரின் நாசி லெமாவை ஒரு கைப்பார்க்கவே அதிகாலையில் அக்கடைக்கு வந்து காத்திருப்பர். மலேசியாவில் இந்த சுவையை வேறு எங்கும் சுவைத்திருக்க முடியாது.

அதோடு நின்றுவிடாமல், கெமஞ்சே டர்க்கைஸ் தண்ணீருக்கும் பெயர் போன ஒரு சிற்றூராகும். சூரிய ஒளி சிறிய படிகங்களை தாக்கும்போது ஓர் அழகான நீல நிறத்தை பிரதிபலிக்கும். சுற்றுப்பயணிகளுக்கு தூய்மையான இயற்கையை வழங்கக்கூடிய தன்மை கொண்டிருப்பதுதான் கெமஞ்சே.
பிரமில்லாத ஒரு ஊர் பிரபலமாகி கொண்டிருக்கிறது. நீங்களும் ஒரு முறை கெமஞ்சேவிற்கு வாருங்களேன்….

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்