கேளிக்கை மையம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு தாக்குதல்; விசாரணையை தொடங்கியது போலிஸ்!

கோலாலம்பூர், மே 10-

கோலாலம்பூர்,ஜாலான் யாப் குவான் செங்-ங்கிலுள்ள கேளிக்கை மையம் ஒன்றின் மீது நேற்று அதிகாலையில் அடையாளம் தெரியாத சில நபர்கள், பெட்ரோல் குண்டுகளை வீசி, தாக்குதலை நடத்தியது தொடர்பில், போலிஸ் விசாரணையை முடுக்கி விட்டுள்ளது.

அச்சம்பவத்தை உறுதிபடுத்திய டாங் வாங்கி மாவட்ட போலீஸ் துணைத் தலைவர் சுப்பரின்டென்டான் நஸ்ரான் அப்துல் யூசோப், தீயை மூட்டி சதிநாச வேலையில் ஈடுபட்டது தொடர்பில், குற்றவியல் பிரிவு 435-இன் கீழ் விசாரணை அறிக்கை திறக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

சிசிடிவி கேமரா பதிவின் படி, அச்சம்பவம் அதிகாலை மணி 2.18-க்கு நிகழ்ந்ததாக காட்டப்பட்டாலும், உண்மையான நேரத்தை போலிஸ் ஆராய்ந்து வருவதாக, நஸ்ரான் அப்துல் யூசோப் குறிப்பிட்டார்.

இரு மோட்டார்சைக்கிள்களில் வந்திருந்த 4 ஆடவர்களில் ஒருவர், சம்பந்தப்பட்ட மையத்தின் மீது 2 பெட்ரோல் குண்டுகளை வீசிய பிறகு, அவர்கள் அனைவரும் அங்கிருந்து தப்பி செல்லும் காணொலி, சமூக ஊடகங்களில் பரவலாகியுள்ளது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்