கைகலப்பு ஆறு நபர்கள் கைது

துண்டிக்கப்பட்ட கை மணிக்கட்டு கீழே கிடந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பேரா, தஞ்சேங் ரம்புத்தானில் நிகழ்ந்த கைகலப்பு சம்பவம் தொடர்பில் போலீசார் இதுவரையில் ஆறு நபர்களை கைது செய்துள்ளனர்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில் , சுகாதார அமைச்சின் சுல்தான் அஸ்லான் ஷா, பயிற்சி கழகத்திற்கு அருகில் கும்பல் ஒன்றினால் தாக்கப்பட்ட இச்சம்பவத்தில் மூவர் படுகாயம் அடைந்தனர்.

இந்த கைகலப்பு தொடர்பாக போலீசார் மேற்கொண்ட புலன் விசாரணையில் 23 க்கும் 37 க்கும் இடைப்பட்ட வயதுடைய அறுவர் கைது செய்யப்பட்டு, இன்று காலையில் ஈப்போ மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

போதைப்பொருள் விற்பனைக்கான இடத்தை கைப்பற்றுவதில் இரு கும்பல்களுக்கு இடையில் சண்டை நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது. கைது செய்யப்பட்ட அறுவரையும் வரும் வெள்ளிக்கிழமை வரையில் தடுத்து வைப்பதற்கு நீதிமன்ற ஆணைப் பெறப்பட்டுள்ளது என்று ஈப்போ மாவட்ட போலீஸ் தலைவர் சகோதரர் ஜைனல் ஆபிதீன் தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்