கைதிகளுக்கு புதிய தண்டனை முறை எதிர்கால விளைவுகளை கருத்தில் கொள்வீர்

கட்டாய மரணத் தண்டனைக்கு பதிலாக ஆயுள் தண்டனையை விதிக்கும் புதிய தண்டனை முறை குறித்து, அரசாங்கம் மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று குற்றவியல் நிபுணர் ஒருவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
குறிப்பாக, நடப்புத் தண்டனை முறைக்கு பதிலாக மாற்றுத் தண்டனை விதிக்கப்படுவது, எதிர்காலத்தில் எத்தகைய விளைவுகள் ஏற்படும் என்பதை அரசாங்கம் கருத்தில் கொள்ள வேண்டும் என்று குற்றவியல் நிபுணர் Shahhul Hamid Abdul Rahim கேட்டுக்கொண்டுள்ளார்.
கொலை போன்ற கடுங்குற்றங்களை புரிந்தவர்களுக்கு கடுமையான தண்டனை விதிக்கப்பட என்று குடும்ப உறுப்பினர்களை பறிகொடுத்து தவிக்கும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் கொலை குற்றம்புரிந்தவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படுவது, குடும் உறுப்பினர்களை இழந்த பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு பெரும் மன உளைச்சளை ஏற்படுத்தும் என்பதை அரசாங்கம் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று அந்த குற்றவியல் நிபுணர் கேட்டுக்கொண்டுள்ளார்.
கட்டாய மரணத்தண்டனை முறை ஆயுள் தண்டனையாக மாற்றப்படுவது தொடர்பில் நடப்பு சட்டம் திருத்தப்படும் என்று சட்டத்துறை அமைச்சர் Azalina Othman Said கூறியிருப்பது தொடர்பில் குற்றவியல் வழக்குகளில் நிபுணத்துவம் பெற்றவரான Shahhul Hamid எதிர்வினையாற்றினார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்