கோபாலகிருஷ்ணனின் மேல்முறையீடு நிராகரிப்பு

ஓர் இந்திய தம்பதியருக்கு அவதூறு விளைவித்த குற்றத்திற்காக ஒரு லட்சத்து 50 ஆயிரம் வெள்ளி இழப்பீடு வழங்க வேண்டும் என்று முன்னாள் பாடாங் செராய் நாடாளுமன்ற உறுப்பினர் என். கோபாலகிருஷ்ணனுக்கு உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து புத்ராஜெயா அப்பீல் நீதிமன்றதில் செய்து கொள்ளப்பட்ட மேல்முறையீடு இன்று நிராகரிக்கப்பட்டது.

மலேசிய விமான நிறுவனத்தின் விமானியான எஸ். செல்வகுமாருக்கும், அவரின் மனைவியும், சுங்கை சிப்புட் பிகேஆர் கட்சியின் முன்னாள் பொருளாளருமான ஆர்.இந்தராணிக்கும் மேற்கண்ட தொகையை இழப்பீடாக கோபாலகிருஷ்ணன் வழங்க வேண்டும் என்று மூவர் அடங்கிய நீதிபதிகள் குழுவினருக்கு தலைமையேற்ற அப்பீல் நீதிமன்ற நீதிபதி டத்தோ லீ ஸ்வீ செங் தமது தீர்ப்பில் தெரிவித்தார்.

அந்த தம்பதியருக்கு எதிராக வாட்சப்-பில் பதிவேற்றம் செய்த குறுந்தகவலின் மூலம் கோபாலகிருஷ்ணன் இத்தகைய அவதூற்றை விளைவித்ததாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்