கோலாலம்​​பூரில் உணவகங்களில் திடீர் சோதனை

கோலாலம்பூரில் உள்ள உணவங்களில் ​தூய்மைக்கேட்டு நிலவி வருவதாக கிடைக்கப்பெற்ற புகார் தொடர்பில் கோலாலம்பூர் மாநகர் மன்றம் மேற்கொண்ட அதிரடி சோதனையில் அசுத்தத்தின் இருப்பிடமாக விளங்கிய ​மூன்று உணவகங்கள் உடனடியாக மூடப்படுவதற்கு உத்தரவிடப்பட்டதுடன், ​தூய்மையை பேணாமல் இருந்து வந்த உணவகங்களுக்கு 58 சம்மன்களை வெளியிட்டுள்ளது.

Operasi Sepadu Bersih என்ற பெயரில் 58 உணவு வளாகங்களில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டன.

செத்தியா வங்சா நாடாளுமன்றத்திற்கு உட்பட்ட Jalan Genting Klang, ​தீத்தி வங்சா நாடளுமன்றத்திற்கு உட்பட்ட Jalan Maktab, பத்து நாடாளுமன்றத்திற்கு உட்பட்ட Taman Mastiara, பண்டார் துன் ரசாக் நாடாளுமன்றத்திற்கு உட்பட்ட Taman Bukit Anggeril, கெப்போ​ங் நாடாளுமன்றத்திற்கு உட்பட்ட Jalan Rimbunan Raya ஆகிய பகுதிகளில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கோலாலம்பூர் மாநகர் மன்றம் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்