கோல குபு பாரு இடைத்தேர்தலை இந்திய வாக்காளர்கள் புறக்கணிக்க மாட்டார்கள்! சைபுதீன் நசுட்டியோன் நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.

கோல குபு பாரு, மே 09-

கோல குபு பாரு இடைத்தேர்தலில், அங்குள்ள இந்திய வாக்காளர்கள், பக்காத்தான் ஹாராப்பான் கூட்டணி வேட்பாளரான பாங் சாக் தாவொ-வை ஆதரிப்பார்கள் என PKR கட்சி பொதுச்செயலாளர் டத்தோ ஸ்ரீ சைபுதீன் நசுட்டியோன் இஸ்மாயில் நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.

சம்பந்தப்பட்ட இடைத்தேர்தலை புறக்கணிக்கும்படி சில தரப்பினர் கேட்டுக்கொண்டாலும், இந்திய வாக்காளர்கள் அக்கோரிக்கைகளுக்கு ஒருபோதும் செவிசாய்க்க மாட்டார்கள்.

தங்கள் எதிர்காலம் குறித்து விவேகத்துடன் சிந்தித்து, அவர்கள் அனைவரும் ஒற்றுமை அரசாங்கத்தின் வேட்பாளரை ஆதரிப்பார்கள் என உள்துறை அமைச்சருமாகிய சைபுதீன் நசுட்டியோன் கூறினார்.

நடப்பு ஒற்றுமை அரசாங்கத்தின் மீதான அதிருப்திகளை வெளிப்படுத்தும் வகையில், கோல குபு பாரு-விலுள்ள இந்திய வாக்காளர்கள் இடைதேர்தலை புறக்கணிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.

அது குறித்து கருத்துரைத்த போது அக்கூற்றை முன்வைத்த சைபுதீன் நசுட்டியோன், அரசாங்க தரப்பு வேட்பாளரை வெற்றியடைய செய்வதன் வழி, கோல குபு பாரு தொகுதிக்கே அதிகமான பலன்கள் கிடைக்கும் எனவும், இதர வேட்பாளரை வெற்றியடைய செய்தால், அவர்கள் கூட்டரசு மற்றும் சிலாங்கூர் அரசாங்கங்களுடன் ஒத்துழைப்பது சிரமம் என்றார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்