சண்டையினால் ஏற்பட்ட அடையாளமாகும்

பேரா, ஜூன் 24-

பேரா, தஞ்சோங் ரம்புத்தான்- னில் மலேசிய சுகாதார அமைச்சின் சுல்தான் அஸ்லான் ஷா- பயிற்சி கழகத்தின் அருகில் கீழே மனிதக் கை கண்டு பிடிக்கப்பட்டது, சண்டையினால் விளைந்ததாகும் என்று ஈப்போ மாவட்ட போலீஸ் தலைவர் அபாங் ஜைனல் அபிதீன் விளக்கம் அளித்துள்ளார்.

இந்த சண்டையில் 20 க்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவத்தில் 26 க்கும் 30 க்கும் இடைப்பட்ட வயதுடைய மூவர் படுகாயம் அடைந்துள்ளனர். இது தொடர்பாக நேற்று காலை 11.03 மணியளவில் போலீஸ் புகார் பெறப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

ஒருவரின் கை மணிக்கட்டு கீழே கிடந்தது. மற்றொருவர் கைது துண்டிக்கப்படும் அளவிற்கு படுகாயம் அடைந்துள்ளார். மற்றொருவர் கை நரம்பபு அறுந்துள்ளது என்று பூர்வாங்க விசாரணையில் தெரியவந்துள்ளது என்று அபாங் ஜைனல் அபிதீன் தெரிவித்துள்ளார்.

காயமுற்ற மூன்று பேரும் தற்போது ஈப்போ, ராஜா பெர்மைசூரி பைனுன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அவர் மேலும் கூறினார்.

போதைப்பொருள் விநியோகத்திற்கான தங்கள் இடங்களில் கைப்பற்றுவதில் ஏற்பட்ட தகராற்று காரணமாக இந்த சண்டை நிகழ்ந்து இருக்கலாம் என்று நம்பப்படுவதாக அவர் தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்