சந்தேகப் பேர்வழிக்கு போலீஸ் வலை வீசுகிறது

புத்ராஜெயாவில் உள்ள சுற்றலா, கலை, பண்பாட்டுத்துறை அமைச்சரின் அலுவலகத்திற்கு வெடிகுண்டு போன்ற ஒரு பொருளை அனுப்பிவைத்து பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியதாக நம்பப்படும் ஆடவர் ஒருவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

கடந்த ஜுன் 5 ஆம் தேதி நிகழ்ந்த இந்த சம்பவத்தில் பொட்டலத்தை பொருள் பட்டுவாடா சேவை நிறுவனத்தின் அலுவலகத்தில் ஒப்படைப்பதற்கு அந்த ஆடவர் வந்த போது, அங்குள்ள ரகசிய கேமராவில் அவரின் உருவம் பதிவாகியுள்ளது என்று கோலாலம்பூர் போலீஸ் தலைவர் Datuk Rusdi Mohd Isa தெரிவத்துள்ளார்.

Sungai Buloh-வில் உள்ள பொருள் பட்டுவாடா அலுவலகத்திற்கு வந்த போது அவர் முக கவரி அணிந்துள்ளார்.

அந்தப் பொருளை அமைச்சர் Datuk Seri Tiong King Sing அலுவலகத்தில் ஒப்படைப்பதற்கு அந்நபர் முகவரியிட்டு இருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

சிறப்பு நிற சட்டை மற்றும் கறுப்பு நிற ஜேக்கெட்டை அணிந்திருந்த அந்த நபர், பொட்டலத்தை பட்டுவாடா செய்வதற்கு வேறு ஒரு நபருரின் பெயரை பயன்படுத்தி இருப்பது புலன் விசாரணையில் தெரியவந்துள்ளதாக Datuk Rusdi குறிப்பிட்டுள்ளார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்