சமயப் போதகர் ஃபிர்தௌஸ் வோங்- கிடம் போலீஸ் வாக்குமூலம்

இஸ்லாத்தை தழுவுவதற்கு ஆர்வம் கொண்டுள்ள வயது குறைந்தப் பிள்ளைகளின் கோரிக்கைகளை நிறைவு செய்வதற்கான வழிமுறைகள் குறித்து பகிரங்கமாக விவாதித்ததாக கூறப்படும் சமயப் போதகர் Firdaus Wong-கிடம் போலீஸ் துறை வாக்குமூலம் பதிவு செய்துள்ளது.

Firdaus Wong மற்றும் அவருக்கு எதிராக புகார் கொடுத்துள்ள நபரின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ACP Shahrulnizam Jaafar தெரிவித்தார்.

Firdaus Wong-கிடம் நேற்று போலீஸ்துறை வாக்குமூலம் பதிவு செய்த போது, விசாரணைக்கு ஏதுவாக அவரின் கைப்பேசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Firdaus Wong- கிற்கு எதிராக கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டின் உள்ளடக்கம் சமூக வலைத்தளங்களில் இடம் பெற்று உள்ளதாக கூறப்படுகிறது.. எனவே விசாரணை அறிக்கையை முறைப்படுத்துவதற்கு முன்னதாக சில தகவல்களை உறுதிப்படுத்த வேண்டியுள்ளது என்று ACP Shahrulnizam தெரிவித்தார்.

முஸ்லிம் அல்லாத சிறார்கள் மதம் மாறுவதற்கு ஆர்வப்படுவார்களேயானால் அவர்களை எவ்வாறு ரகசியமாக மதம் மாற்றுவது என்பது குறித்து பகிரங்கமாக பேசியதாக கூறப்படும் Firdaus Wong தொடர்புடைய காணொளி ஒன்று அண்மையில் சமூக வலைளத்தளங்களில் வைரலாகி, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதன் தொடர்பில் Firdaus Wong –கிற்கு எதிராக அதிகமான ர் போலீஸ் புகார் செய்யப்பட்டுள்ளன.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்