சிங்கப்பூர் நாடாளுமன்றக்கூட்டத்தில் மாமன்னர் பங்கேற்றார்

சிங்கப்பூருக்கு அதிகாரத்துவ வருகையை மேற்கொண்டுள்ள மாமன்னர் சுல்தான் இப்ராஹிம், தமது இரண்டு நாள் பயணத்தின் ஒரு பகுதியாக இன்று செவ்வாய்க்கிழமை மதியம் அக்குடியரசின் நாடாளுமன்றத்திற்கு வருகை புரிந்தார்.

மலேசிய மாமன்னர் ஒருவர், சிங்கப்பூர் நாடாளுமன்றத்திற்கு வருகை புரிந்து, அந்த அவையின் அமர்வை நேரில் பார்வையிட்டது இதுவே முதல் முறையாகும்.

சிங்கப்பூர் நாடாளுமன்றத்துக்கு மலேசிய மாமன்னர் வந்திருப்பது குறித்து நாடாளுமன்ற சபாநாயகர் சீ கியான் பெங், அறிவித்தார். கூடியிருந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் மாமன்னரையும் அவருடன் வந்திருந்த பேராளர் குழுவையும் வரவேற்றனர்.

இதையடுத்து, நாடாளுமன்ற அமர்வை மாமன்னர் நேரில் கண்டார்.

மலேசிய மாமன்னரின் இந்த வருகையானது, இரு நாடுகளுக்கு இடையிலான ஆழமான பரஸ்பர உறவை காட்டுகிறது என்று சபாநாயகர் சீ கியான் பெங் புகழாரம் சூட்டினார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்