சீனர்களின் ஆதிக்கம் கொண்ட கட்சி என்ற தோற்றத்திலிருந்து டிஏபி விடுபட வேண்டும்!

பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல் 09-

நாட்டில் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடிய கட்சியாக டிஏபி உருமாற வேண்டுமானால், அதன் தோற்றம் மாற்றப்பட வேண்டும்.

குறிப்பாக, 1965ஆம் ஆண்டில் டிஏபி தோற்றுவிக்கப்பட்டதிலிருந்து தற்போது வரையில், சிறும்பான்மையினரைப் பிரதிநிதிக்கக்கூடியதாகவும் சீன தலைவர்களின் ஆதிக்கமிக்கதாகவும் பார்க்கப்படும் அதன் தோற்றம் மாற்றப்பட வேண்டுமென இளைஞர் விளையாட்டு அமைச்சர் ஹன்னாஹ் யோஹ் தெரிவித்தார்.

பன்மைத்துவம் மிக்க கட்சியாக இருப்பதே டிஏபி-க்கு பலம். வரக்கூடிய தேர்தல்களில் கடசான், இபான் உட்பட பல்லின மக்கள் அக்கட்சியின் வேட்பாளர்களாக நிறுத்தப்பட வேண்டும்.

குறிப்பிட்ட இனம் மற்றும் சமயத்திற்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கக்கூடிய இரு கட்சிகளை பிரதானமாக கொண்டுள்ள எதிர்க்கட்சியினர், டிஏபி-யில் அதிகமான மலாய் சமூகத்தினர் இணைவதை தடுப்பதற்காக, டிஏபி-க்கு எதிரான கூற்றுகளை முன்வைக்கின்றனர்.

திக் தொக்-கில் தங்களுக்கு எதிராக விஷமனத்தனமான பதிவுகள் அதிகம் பகிரப்படும் நிலையில், மலாய் சமூகத்தினர் அவற்றை நம்பாமல் மதிப்பாய்வு செய்து டிஏபி-யில் தைரியமாக இணைய முன்வர வேண்டுமென மலேசியாகினி உடனான நேர்க்காணலில் ஹன்னாஹ் யோஹ் கூறினார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்