சும்பாங்சிஹ் கிண்ண காற்பந்தாட்டத்தை புறக்கணிக்கும் சிலாங்கூர் FC-யின் முடிவுக்கு, மாநில சுல்தான் ஆதரவு வழங்கினார்.

சிலாங்கூர், மே 09-

JOHOR DARUL TA’ZIM – JDT-க்கு எதிராக நாளை நடைபெறவிருக்கும் சும்பாங்சிஹ் கிண்ண காற்பந்தாட்டத்திற்கு வருகைப் புரிய போவதில்லை எனும் சிலாங்கூர் FC-யின் முடிவுக்கு, மாநில சுல்தான் சுல்தான் ஷராபுதின் இட்ரிஸ் ஷாஹ் ஆதரவை வழங்கியுள்ளார்.

அண்மையில், சிலாங்கூர் FC ஆட்டக்காரர் பைசால் ஹலிம் மீது நிகழ்ந்தப்பட்ட ஆசிட் தாக்குதல் உள்பட 3 காற்பந்தாட்டகாரர்கள் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்.

நடப்பு சூழல், விளையாட்டாளர்களுக்கும் அதிகாரிகளுக்கும் பாதுகாப்பு அற்றதாக உள்ளாதால், அந்த ஆட்டத்தை ஒத்திவைக்கும்படி, சிலாங்கூர் FC, மலேசிய காற்பந்து லீக் – MFL-லிடம் கோரிக்கையை முன்வைத்திருந்தது.

அக்கோரிக்கையை MFL ஏற்காததை அடுத்து, நாளை, ஜோகூர், இஸ்கண்டார் புத்தெரி-யிலுள்ள சுல்தான் இப்ராஹிம் அரங்கில் நடைபெறவிருக்கும் சும்பாங்சிஹ் கிண்ண ஆட்டத்திற்கு வருகைப் புரிய போவதில்லை என சிலாங்கூர் FC நேற்று கூறியிருந்தது.

இந்நிலையில், சிலாங்கூர் FC எடுத்துள்ள நிலைப்பாடு சரியானது என கூறியுள்ள அவ்வணியின் புரவளருமான மாநில சுல்தான், காற்பந்தாட்டத்தைவிட, விளையாட்டாளர்களின் உயிரும் பாதுகாப்பும் மிக முக்கியம் என கூறியதாக, சிலாங்கூர் அரச அலுவலகம் அறிக்கை வெளியிட்டுள்ளது

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்