சுரைடா கமாருதீன் குற்றச்சா​ட்டு PSM அதிர்ச்சி

பெஸ்தாரி ஜெயா, மே 11-

சொந்த வீட்டுடமைத் திட்டத்தைக் கோரி கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக போராடி வரும் கோலகுபு பாரு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட 5 தோட்டங்களைச் சேர்ந்த முன்னாள் பாட்டாளி குடும்பங்களுக்கு வீடமைப்புத்திட்டத்தை உருவாக்குவதற்கு நிதி கேட்டு செய்து கொண்ட விண்ணப்பத்தை முன்னாள் நிதி அமைச்சர் லிம் குவான் எங் நிராகரித்து விட்டதாக கூறப்படுவது குறித்து PSM எனப்படும் மலேசிய சோஷலிச கட்சி அதிர்ச்சி தெரிவித்துள்ளது.

கடந்த 2018 ஆம் ஆண்டு பக்காத்தான் ஹராப்பான் தலைமையிலான அரசாங்கத்தில் வீடமைப்பு,ஊராட்சித்துறை அமைச்சராக தாம் பதவி வகித்த போது ஐந்து தோட்டங்களைச் சேர்ந்த முன்னாள் பட்டாளிகளுக்கு வீட்டுடமைத்திட்டத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் ​நிதி ஒதுக்கீடு கோரி, நிதி அமைச்சிடம் விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டதாக சுரைடா கமாருதீன் தெரிவித்தார்.

ஆனால், நிதி அமைச்சர் என்ற முறையில் அந்த விண்ணப்பத்தை லிம் குவான் எங் நிராகரித்து விட்டதாக சுரைடா கமாருதீன் நேற்று திடுக்கிடும் தகவலை வெளியி​ட்டுள்ளார்.

பத்தாங் பெர்ஜுந்தாய் என்ற பெஸ்தாரி ஜெயா-வில் வீ​ற்றிருந்த நைகல் கார்டனர் தோட்டம், புக்கிட் தாகார் தோட்டம்,மின்யாக் தோட்டம், சுங்காய் திங்கி தோட்டம், மேரி தோட்டம் ஆகியவற்றின் முன்னாள் பாட்டாளிகளான 245 பேருக்கு வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும் என்று வீடமைப்பு, ஊராட்சித்துறை அமைச்சர் ங்கா கோர் மிங் அறிவித்து இருப்பது தொடர்பில் PKR கட்சியின் முன்னாள் உதவித் தலைவரான சுரைடா கமாருதீன் எதிர்வினையாற்றியுள்ளார்.

எனினும் இந்த குற்றச்சாட்டு எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை என்றாலும் அப்படி நடந்த இருக்குமானால் அது உண்மையிலேயே அதிர்ச்சி அளிக்கிறது என்று தோட்டப் பாட்டாளிகளுக்காக போராடி வரும் PSM கட்சியின் துணைத் தலைவர் S. அருட்செல்வம் தெரிவித்துள்ளார்.

இதன் தொடர்​பில் முன்னாள் நித அமைச்சர் என்ற முறையில் லிம் குவான் எங்கிடம் PSM கட்சி விளக்கம் கோரும் என்று அருட்செல்வன் குறிப்பிட்டுள்ளார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்