சுல்தானை அவதூறாக பேசியதாக பாபகோமா மீது குற்றச்சாட்டு

கோலாலம்பூர், மே 02-

சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டதாகவும் மாமன்னரை அவதூறாக பேசியதாகவும் நபர் ஒருவர் கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றச்சாட்டப்பட்டார்.

பாபகோமா என்றழைக்கப்படும் வான் முஹம்மது அஸ்ரி வான் டெரிஸ் என்ற அந்த நபர் நீதிபதி சித்தி அமினா கசாலி முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட போது அக்குற்றத்தை அவர் ஒப்புக் கொள்ளவில்லை.

குற்றம் என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 3 ஆண்டுகள் சிறை அல்லது 5,000 வெள்ளி அபராதம் அல்லது இரண்டுமே விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 4(1)(c) பிரிவின் கீழ் அந்நபர் குற்றச்சாட்டப்படுவார்.

கடந்த ஏப்ரல் 29 ஆம் தேதி தமக்கு சொந்தமான X கணக்கில் சர்ச்சைக்குரிய கருத்துக்களையும் மாமன்னரைக் குறித்து அவதூறாகவும் பதிவிட்டதாக அந்நபர் மீது குற்றச்சாட்டப்பட்டுள்ளது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்