செந்தூல் நாகம்மன் கோவில் நிர்வாகத்தினர், சரஸ்வதி கந்தசாமியுடன் சந்திப்பு

கோலாலம்பூர், செந்தூல் ஸ்ரீ நாக அம்மன் கோவில் பக்தர்கள் சங்கத்தின் உறுப்பினர்கள் நேற்று மரியாதை நிமித்தமாகவும் கோவில் சம்பந்தப்பட்ட விஷயமாகவும் கலந்துரையாட ஒருமைப்பாடு அமைச்சின் துணை அமைச்சர் சரஸ்வதி கந்தசாமியை சந்தித்தனர்.

தலைவர் ரமணி சுப்பையா, செயலாளர் ஹரிஹரன், துணை பொருளாளர் டாக்டர்.  வானதி மற்றும் உறுப்பினர் செல்வா இக்கலந்துரையாடலில் கலந்து கொன்டனர்.

கடந்த வாரம் அமைச்சர்  டாக்டர் ஸலேஹா, பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பி.பிரபாகரன் மற்றும் மேம்பாட்டாளர் நிறுவனமான ஓய்.டி.எல். பிரதிநிதிகளுடன் ஒரு சந்திப்பை நடத்திய பின்னர் ஆலய நிர்வாகத்தினருடன் இந்த சந்திப்பு நடைபெற்றது.

இச்சந்திப்பில் கோவில் நிர்வாகத்தினரிடம் இருந்து அனைத்து தகவல்களையும்  செனட்டர் சரஸ்வதி கந்தசாமி கேட்டு அறிந்தார்.

அந்த இடத்தில் நீண்ட காலமாக கோயில் இருப்பதால், தகுந்த முடிவு எடுப்பது கடினம். மேலும் சமயம் மற்றும் தார்மீக அடிப்படையிலேயே எந்தவொரு முடிவும் எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார். மேலும் அவர் கூறியது போல எந்த தரப்பினருக்கும் நஷ்டமோ அல்லது கலங்கமோ ஏற்படாமல் கோவில் விஷயம் சுமூகமான முறையில் கொண்டு செல்லப்படும்.

கடந்த வார கூட்டத்தில் ஓய்.டி.எல். உடன் பேசப்பட்ட விஷயங்கள் மற்றும் ஓய்.டி.எல். இன் பரிந்துரைகள் மற்றும் இந்த பிரச்னையில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து கோவில் நிர்வாகத்திற்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

இப்பிரச்னையில் சிறந்த தீர்வு கிடைக்க வேண்டும் என்பதே அனைவரது விருப்பம் ஆகும். எதிர்காலத்தில் சிறந்த தீர்வை பெற்றுத்தர ஆலயம் ஒத்துழைக்கும் என்ற நம்பிக்கை தனக்கு உள்ளதாக துணை அமைச்சர் கூறினார்.

இதனிடையே கோவில் நிர்வாகத்தின் அழைப்பை ஏற்று  துணை அமைச்சர் சரஸ்வதி கந்தசாமி இக்கோவிலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் மாற்று நிலத்தை காணச் சென்றார்.  அங்கே கோவில் அமைப்பதற்கான அனைத்து வசதிகளும் இருக்கிறதா தண்ணீர் மின்சாரம் கார் நிறுத்துமிடம் மற்றும் பக்தர்கள் கோவிலுக்கு வருவதற்கான வசதி ஆகிய அனைத்தும் கணக்கில் கணக்கில் கொள்ளப்படும் என்று  துணைஅமைச்சர் தெரிவித்தார்.

எவருக்கும் பாதிப்பு இல்லாத ஒரு முடிவு எடுக்கும் வரை நாம் சிறிது பொறுமை காக்க வேண்டும் என்றும் எடுக்க முடிவுகள் தரப்பினருக்கும் சுமூக மனதாக இருக்க வேண்டும் என்றும் துணை அமைச்சர் தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்