தனியார் நிறுவனம் செலவினத்தை ஏற்றுள்ளது

பத்துமலை தைப்பூ விழாவையொட்டி கிள்ளான் பள்ளத்தாக்கில் பத்துமலையை நோக்கி இரண்டு தினங்களுக்கு இலவச ரயில் சேவைக்கு ஏற்படக்கூடிய செலவினத்தை ஒரு தனியார் நிறுவனம் ஏற்றுக்கொண்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்தார்.

மலாயன் ரயில்வே பெர்ஹாட்டின் ரயில் இருப்புப்பாதையின் தரத்தை மேம்படுத்தும் பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ள தனியார் நிறுவனம், தனது சமூக கடப்பாட்டின் ஒரு பகுதியாக தைப்பூச விழாவில் பங்கேற்கும் பக்தர்களுக்காக நாள் ஒன்றுக்கு ஏற்படக்கூடிய அடிப்படை செலவினமான 2 லட்சம் வெள்ளியை சம்பந்தப்பட்ட நிறுவனம் ஏற்றுக்கொண்டு இருப்பதாக அந்தோணி லோக் குறிப்பிட்டார்.

இவ்வேளையில் போக்குவரத்து அமைச்சின் சார்பில் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் பொறுப்பாளர் டத்தோஸ்ரீ சுப்பிரமணியத்திற்கு, அந்தோணி லோக் தமது நன்றியை தெரிவித்துக்கொண்டார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்