தன்மானம் இருந்தால், தேசிய முன்னணியிலிருந்து ம.இ.கா, மசீச கட்சிகள் வெளியேற வேண்டும்! டான் ஸ்ரீ முகைதீன் யாசின் சவால்

கோல குபு பாரு, மே 10-

தேசிய முன்னணியிலிருந்து ம.இ.கா-வும் மசீசவும் விலகி வந்தால், அவ்விரு கட்சிகளையும் கூட்டணியில் சேர்த்துக்கொள்ள, தாம் தயாராக இருப்பதாக, பெரிக்காதான் நசியனால் தலைவர் டான் ஸ்ரீ முகைதீன் யாசின் தெரிவித்துள்ளார்.

தேசிய முன்னணியில் , அம்னோ தனிச்சையாகவே செயல்பட்டு வருகின்றது. தேர்தல்களில் உறுப்புக் கட்சிகள் போட்டியிடுவதற்கான வாய்ப்புகளை மறுப்பது உள்பட, அம்னோ எடுக்கின்ற பல முடிவுகள், ம.இ.கா-வையும் மசீசவையும் ஒதுக்கிவைத்துள்ளது போலவே உள்ளன.

தங்களுக்கும் தன்மானம் உள்ளதை, ம.இ.காவினரும் மசீசவினரும் அம்னோ-வுக்கு புரிய வைக்க வேண்டும். தங்களுக்கு துளியும் முக்கியத்துவம் வழங்கப்படாத இடத்தில், அவ்விரு கட்சிகள் இன்னமும் இருப்பது ஏன் எனவும் பெர்சத்து கட்சியின் தலைவருமான முகைதீன் யாசின் கேள்வியை எழுப்பினார்.

முடிந்தால் அவ்விரு கட்சிகளும் கூட்டணியிலிருந்து வெளியேறி, தேர்தலில் தனிச்சையாக போட்டியிட்டு, அவர்களது மக்கள் ஆதரவை வெளிப்படுத்திக் காட்டலாம்.

இல்லையென்றால், கெராக்கான், பெரிக்காதான் நசியனால் ஆகிய கட்சிகளுடன் இணைந்து செயல்பட முடிவெடுக்கலாம். அவ்விரு கட்சிகளைச் சேர்த்துக்கொள்ள பெரிக்காதான் நசியனால்-லின் கதவுகள் எப்போதும் திறந்தே இருக்குமென முகைதீன் யாசின் கூறினார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்